Monday, June 8, 2020

புங்கை விதைகள்

இன்று காலை அயற் கிராமங்களான பெரியநீலாவணை, பாண்டிருப்பில் பொறுக்கியது. பந்துகளுக்குள் சென்றும் விட்டன. நறுவிளி, புங்கை, வேம்பு



காலை நடையில், இன்று பாண்டிருப்பில் ஒரு பொக்கிசம் கிடைத்தது. புங்கைப் பொக்கிசம். நுாற்றுக் கணக்கான முழைத்த விதைகள். ஒவ்வொரு முழையும் உள்ளங்கை அளவு பருமனானது. பைகளில் நட்டால் இலகுவாக நாற்று மரங்களாக்கிவிடலாம். தேவையானவர்கள் தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும்.




இன்று மாலை பாண்டிருப்பு சவக்காலை வா வா என அழைத்து நுாற்றுக்கு மேற்பட்ட நன்றாக வளர்ந்த புங்கை நாற்றுக்களைத் தந்தது. ஓட்டமாவடி- வாழைச்சேனை - கல்குடாவிற்கு இரண்டு பார்சல்கள் ரெடி நாளை.






மழை காலம் தொடங்க கூரைக் குப்பைகளும் தரையில் இலகுவாக வெளிவராத நாற்றுக்களை வெளிவிடத் தொடங்கும். கூரைக் குப்பைகளிலிருந்து ஆயிரக் கணக்கான விதைகளையும் சேகரிக்கலாம். அவைகளை சேதனப் பசளையாகவும் பாவிக்கலாம். டெங்கு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.











No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...