Monday, June 1, 2020

இராணுவமும், மருத்துவத்துறையும் இணைந்து வனங்களை மீளுருவாக்குதல்.


”காடுகளும், காலநிலை மாற்றமும், அதனை எதிர்கொள்வதில் மருத்துவத்துறையின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் எனது உரையும் கலந்துரையாடலும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர். ரீ.எஸ்.ரீ.எஸ்.ஆர். றஜாப் தலைமையில் இன்று அந்த வைத்தியசாலையில் நடைபெற்றது. நிகழ்வில் டொக்டர். மோகனகாந்தன், பொத்துவில், தாண்டியடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் சுதத் திசாநாயக்க, மற்றும் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். அந்தப் பிரதேசத்தின் வனமாக்கலுக்கு எல்லோரும் பங்களிப்பு செய்வதாக உறுதி பூண்டனர். வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. டொக்டர். றஜாப் அவர்களிற்கு மனமார்ந்த நன்றிகள். இந்த நிகழ்வையும், உரையாடலையும் ஏற்பாடு செய்ததற்கு மட்டுமல்ல, வனங்களின் நேசன் கேணல் சுதத் திசாநாயக்கவை அறிமுகப்படுத்தியதற்கும். இனி அவரது வீரர்கள் இந்தப் பணியினை தடையின்றி முன்னெடுத்துச் செல்வார்கள். நன்றி டொக்டர்.








No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...