Tuesday, June 2, 2020

முல்லைத்தீவின் வனங்களின் அளவை அதிகரித்தல

Amritha Ayem is with Rujica Niththiyanantharaja and Jenojan Kanthasamy.
முல்லைத்தீவின் வனங்களின் அளவு கடந்த ஒரு தசாப்த காலமாக பல்வேறு காரணிகளால் சுரண்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றது. வனங்களை மீளுருவாக்கி காடுகளின் அளவை அதிகரிப்பது இன்றியமையாதது. அந்த வகையில், அதன் முதற் கட்டமாக, நேற்று முல்லைத்தீவு, முள்ளியவளை கலைவாணி கல்வி நிலையத்தின் இயக்குனர் திரு. கௌசிகன் (கணிதப்பாட ஆசிரியர்) அவர்களின் அனுசரணையில் அந்த நிலையத்தின் மாணவர்களைக் கொண்டு, “சமூக சிற்பிகள்” நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டாளர் சட்டத்தரணி ருஜிகா நித்தியானந்தராஜா அவர்களின் ஏற்பாட்டிலும், தலைமையிலும் ஒரு கலந்ததுரையாடலும், விதைப்பந்து பயிற்சிப்பட்டறையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நான் வளவாளராக கலந்து கொண்டேன். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துரையாடலிலும், பயிற்சிப்பட்டறையிலும் கலந்துகொண்டு உயிர்ப்பாக்கினார்கள். முடிவில் 3500 க்கு மேற்பட்ட விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டன. இவ்வகையான சுற்றுச்சூழல்சார்பான நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் தொடர்வதாக உறுதிகூறினார்கள். இதற்கு உறுதுணையாகவிருந்த சட்டத்தரணி லக்சிகா வசந்த், ஜெனோஜன் கந்தசாமி, ”சமூகச் சிற்பிகள்” முல்லைத்தீவுக் கிளையின் உத்தியோகத்தர்களான புவனச்சந்திரசன் அபோஜிதன், டோல்ற்றன் பிரகாஸ், சக்கி அகமட் போன்றவர்களுக்கு ஒரு கடலளவு அன்பும், நன்றியும். தடைகளைக் கடந்து முன்செல்வோம். முன்னெடுப்போம்.






















Amritha Ayem
விதைப்பந்து திருவிழா, முல்லைத்தீவு, முள்ளியவளையில் நடந்து கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...