Monday, June 1, 2020

மடங்காத நேர்மையான, மக்களின் அதிகாரி உருத்திரன் உதயசிறிதர்

வாழ்க்கையின் நொடிகளைக் கடந்து செல்லும்போது எங்களையே நாங்கள் அவர்களில் காணும் மனிதர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் (நேர்மறையான விடயங்களில்). என்னையே சில நொடிகளில் காணும் மனிதர்களை சந்திக்கும்போதும், அசைபோடும்போதும் அவர்களில் எனக்கு அலாதிப் பிரியமும், கொண்டாட்டமும் உண்டாகின்றது. அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
அவன் காரைதீவு. நான் மருதமுனை. இருவரும் உயர்தர உயிரியல் விஞ்ஞானம் படிக்கும்போதே நட்பு தொடங்கியது. இருவரும் பீ.எஸ்ஸி, உயிரியலுக்கு 1990களின் நடுப்பகுதியல் கிழக்குப் பல்கலைக்கழகம் வருகிறோம். பின்னர் தாவரவியல் விசேடம் கற்கிறான். நான் விலங்கியல். பின்னர் இருவரும் அதே பல்கலைக்கழகத்தில் அவன் தாவரவியல் துறையிலும், நான் விலங்கியல் துறையிலும் தற்காலிக உதவி விரிவுரையாளர்களாக வேலை செய்கிறோம். ஒரு வருடம் முடிய, பின்னர் இருவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவில் உதவி விரிவுரையாளர்களாக 2000 களின் ஆரம்பத்தில் செல்கிறோம். இருவருடங்களை இருவரும் பூர்த்தி செய்யும் போது, இயற்கை அவனை இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்கிறது. எனக்கு இன்னொரு பாதையை தேர்வு செய்கிறது. ஏதாவதொரு பல்கலைகழகத்தில் சிறந்த ஆசிரியராக இருக்க வேண்டியவன். பல்வேறு காரணங்களால் மக்களின் நிருவாக அதிகாரியாகிறான்.
குறைவாகக் கதைப்பான். நிறையச் செயற்பாடுவான். நேர்மை, வேகம், மடங்காத தன்மை, பயமில்லாமை, கேட்டல் எல்லாம் அவன்தான். அவன் ஒரு பிரதேச செயலாளர். ஏனைய பிரதேச செயலாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியதற்காக நிர்வாக நடவடிக்கைகளை பாராட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த நிர்வாகத்திற்கான பிரதேச செயலாளராக அவனை அரசாங்கம் 2012ல் கௌரவித்தது. இலங்கை உற்பத்தித் திறன் செயலகம், தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால், உற்பத்தித் திறன் அபிவிருத்தில் முதலிடம் பிடித்தததற்காக 2014 ம் ஆண்டு அவன் கடமையாற்றிய செங்கல்லடி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்கு கிடைத்தது. (அதற்கு முந்திய ஆண்டு அவன் கடமையாற்றிய வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது). அவனுக்கு உயிரியலில் இருந்த திறமையான அறிவை என்றும் பயன்படுத்த தவறியதேயில்லை. (வெல்லாவெளியில் வேலை செய்யும்போது ஆற்றுவாழை (ஐக்கோனியா) யிலிருந்து வெற்றிகரமாக கூட்டுப்பசளை தயாரித்ததும், செங்கல்லடியில் கிளாஸ் கிளினர் (பைற்றர் ஜெற்) மீன்களை கட்டுப்படுத்தும் முகமாக மீன்களிலிருந்து கோழிக்கான தீவனத்தை தயாரிக்க முயற்சி செய்ததும் ஓரளவு என்னோடு சம்பந்தப்பட்டது).
மடங்காத நேர்மையான, மக்களின் அதிகாரியான அவனுக்கு இன்று பிறந்த நாள். திரு உருத்திரன் உதயசிறிதர் அவர்களுக்கு பிறந்த நாள். அவர்களை வாழ்த்துகிறேன்.




No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...