Tuesday, June 2, 2020

யானைகள் நன்கு களைப்படையாமல் தொடர்ச்சியாக நீந்தக்கூடியன

யானைகள் நன்கு களைப்படையாமல் தொடர்ச்சியாக நீந்தக்கூடியன. இதற்கு அதன் தோற்றவமைப்பும், மற்றைய சில இயல்புகளும் உதவி செய்கின்றதன. பாரிய உடல் நன்றாக மிதப்பதற்கும், நீண்ட, அகலமான கால்கள் நீந்துவதற்கும் உதவுகின்றன. நீருக்குள் மூழ்கியபடியே நீந்துவதற்கு, நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் தும்பிக்கைகள் உதவுகின்றன. அதாவது யானைகள் இயல்பாகவே ஸ்னோர்க்லிங் செய்யும் தன்மையுடையன. ஆசிய யானைகளின் இந்த இயல்பே, தற்போது இலங்கையிலுள்ள யானைகள் தென்கிழக்கு இந்தியாவிலிருந்து நீந்தி கடலைக் கடந்து இலங்கைக்கு வந்திருக்கலாம் என சில நிபுணர்கள் கருதுகின்றனர். இன்று கல்ஓயா தேசிய பூங்காவிலுள்ள, டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரத்திற்கு சென்ற வேளை, அந்த நீர்த்தேக்கத்தில் பல சிறிய சிறிய குட்டித் தீவுகள் இருந்தன. அங்கே யானைகள் மேய்வதை காணக்கூடியதாக இருந்தது. கரையிலிருந்து தீவுகளுக்கும், தீவுகளிலிருந்து மற்றைய தீவுகளிற்கும் யானைகள் நீந்திச் செல்கின்றன. கல்ஓயா யானைகளிற்குரிய சிறப்பாக இது இருக்கும் என்னவோ? ஆனால் யானைகள் இயற்கையின் அரிய பல இரகசியங்களையும், அற்புதங்களையும் தங்களுடைய மாயப் பெட்டியொன்றுக்குள் புதைத்து வைத்திருக்கின்றன.







No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...