Monday, June 1, 2020

“வேர்கள் அமைப்பின் விதைப்பந்து திருவிழா“

இன்று தேத்தாத்தீவு (மட்டக்களப்பு), “வேர்கள் அமைப்பு” அதன் இரண்டாவது வருடாந்த ”விதைப்பந்து திருவிழாவை” மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இந் நிகழ்வு அதன் பிரதான செயற்பாட்டாளரும், பிரபல உயர்தர தொழில்நுட்பத்துறை பாட ஆசிரியருமான ரமேஸ் சிவநாயகம் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு, களனி, றுகுணு, சப்ரகமுவ, ஊவாவெல்லஸ்ஸ, யாழ்ப்பாணம், கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களில் கல்வி கற்கும் அவரின் மாணவர்களும் (அவர்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலுக்காக விடுமுறையில் வந்திருந்தவர்கள்), உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர். சுமார் 4000 யி்றகு மேற்பட்ட பந்துகளைச் செய்திருந்தனர். நாளையும், நாளை மறுநாளும் செய்வர். வேர்கள் அமைப்பினருக்கு ஒரு தொகுதி நுாற்களும் கையளிக்கப்பட்டன. (இந்த நுாற்களை முன்னாள் உயிரியல்துறை தலைவரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.நசீர் அகமட் அவர்கள் அன்பளிப்பு செய்திருந்தார்கள்).

சென்ற வருடம் போல் இந்த வருடமும் பல்லாயிரக்கணக்கான பந்துகளுடனும், விதைகளுடனும், முளைத்த விதைகளுடனும், மரக் கன்றுகளுடனும் மட்டக்களப்பின் கானகங்களிற்குள் களமாடச் செல்லத் தயாராகிறார்கள். வேர்கள்.





















No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...