Tuesday, June 2, 2020

Sri Lanka UN Friendship Organisation of Batticaloa district ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தினம் – 2019


Sri Lanka UN Friendship Organisation of Batticaloa district ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தினம் – 2019 நினைவுகூரும் நிகழ்வொன்றை "Youth standing up for human rights" என்னும் கருப்பொருளில் Sustainable Development Goals Youth Network of Sri Lanka, Batticalloa District அமைப்பு இன்று மட்டக்களப்பு வாவி வீதி, உப்போடையிலள்ள சென். திரேஸா பெண்கள் கல்லுாரியில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் பிரதான ஏற்பாட்டாளர் மனோகரன் சுரேஸ்காந்தன் எனது மதிப்பிற்குரிய மாணவன். அவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற அங்கத்தவரும், அந்த மன்றத்தின் கல்வி அமைச்சருமாக இருந்திருக்கிறார். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களை ஒரே குடையின் அணிதிரட்டி வைத்து பல நல்ல விடயங்களை செய்து வருகின்றார். அந்த அமைப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபையின் Sustainable Development Goals களின் 15th Goal ஆன Protect, restore and promote sustainable use of terrestrial ecosystems, sustainably manage forests, combat desertification, and halt and reverse land degradation and halt biodiversity loss ஆகும். இதன் அடிப்படையில் அமைந்த எங்களது இலங்கையைப் பசுமையாக்கும் நடவடிக்கைகள் பற்றி ஒரு உரை ஒன்றை நிகழ்த்தினேன். அரங்கத்தில் இருந்த இளைஞர்கள் மிக ஆர்வமாக பங்குபற்றினார்கள். உடனடியாக சிலர் இந்த நடவடிக்கையை இலங்கையில் மேலும் விஸ்தரிக்கும் நடிவடிக்கையில் இணைந்து கொண்டார்கள். மேலும் பலர் இணையக் காத்திருப்பதாகவும் கூறினார்கள். மிக்க அன்பும், கடலளவு நன்றியும் மனோகரன் சுரேஸ்காந்தன்.



















No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...