Tuesday, June 2, 2020

மூங்கில்கள்

இலங்கையில் மூங்கில்களில் பதினான்குக்கு மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. இவற்றில் 7 இனங்கள் உள்நாட்டுக்குரிய இனங்களும், மற்றையவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களுமாகும். பேராதனை தாவரவியல் பூங்காவில் மேலும் பல மூங்கில் இனங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மூங்கில்கள் ஆற்றங்கரைகளில் நடுவதற்கு சிறப்பானது. இலகுவாக வளர்க்கப்படக்கூடியது. மூங்கில்கள் 1500 க்கு மேற்பட்ட தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றன. அதிலே மண்ணரிப்பைத் தடுத்தலும் மிக முக்கியமானது. மூங்கில்களை வெட்டி எடுக்கும்போது, மிகுதிப் பகுதியை மண்ணிட்டு மூடிவிட வேண்டும். இல்லாவிட்டால் நீர் தேங்கி நுளம்புகள் பரவுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. மழை காலங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இது பற்றிய உங்கள் கருத்துக்களையும், அவதானங்களையும் எதிர்பார்க்கிறோம். (மூங்கில் நடுகை பற்றி பின்னொரு பதிவில் விரிவாக வரும் என நினைக்கின்றேன்).
 • Satheeshvaran Parakiramasingam சேர் டெங்கு நுளம்புகள்்உண்மையில் சிரட்டை மூங்கில் என சிறியளவு தண்ணீர்தேங்கி நிற்கும் பாத்திரங்கள் மூலம் பரவுகிறது என நீங்கள் நம்புகிறீர்களா
  1
 • Mohamed Ismail Mubaraque மூங்கிலையும் புல்லாங்குழலையும் ஒப்பிடும் நம் நல்லுலகிற்கு இது புதுசாயிருக்கும்!!
  1
 • Vadakovay Varatha Rajan மூங்கில் , தென்னை , கமுகு என்பன இராசபயிர் என எனது ஆச்சி சொல்லுவார்.
  உண்மையில் மூங்கிலின் பயன்கள் அளப்பரியன.
  இந்தியா தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தில் பல பண்ணையார்களுக்கு பல ஏக்கர் மூங்கில் தோப்பு உள்ளதாயும் வருடாவருடம் மூங்கிலை வெட்டி விற்பதுதான் அவர்க
  See More
  3
  • Amritha Ayem உண்மை. நீங்கள் சொல்வதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
   1
 • Thanansayan Nadarajah அந்தமான் தீவுகளிலுள்ள ஒரு வகை தவளை இனம் இரண்டு முட்டைகள் மட்டும் இடும். ஒன்று கருக்கட்டியது, மற்றையது கருக்கட்டாதது, அது கருக்கட்டிய முட்டையிலிருந்து வரும் வாற்பேய்க்கு உணவாகப் பயன்படும். இந்தத் தவளை உடைந்த மூங்கில்களில் தேங்கிய நீரிலேயே முட்டை இடுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை animal planet ல் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். இயற்கை எத்தனை அற்புதமானது!
  4
 • Jeyan Deva மூங்கில் பற்றி ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள் வந்துவிட்டன. இன்றைய கிழக்கு மாகாண ஆளுனரும் மூங்கில் பயிர்ச் செய்கையில் அதிக ஆர்வம் காட்டுபவர் எனக் கேள்விப்படுகிறேன். அவரது ஆர்வத்தை மக்கள் பயனபடுத்திக் கொள்ள வேண்டும். வடக்கில் மண்ணுக்கேற்ற மூங்கில் இனங்கSee More
  5
 • Arun Ambalavanar மூங்கில் பல இடங்களில் சங்க பழந்தமிழிலக்கியங்களில் வரூகின்றது. இலங்கையின் உவர்வலய வடக்கில் இதனை சிறப்பாக வளர்க்கமுடியுமா?
  2
 • Raguvaran Balakrishnan அருமையானதகவல்கள்--நன்றிகள்
  1

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...