பசுமையாக்கம் இன்னொரு பரிமாணத்தை எடுத்திருக்கிறது. மனித வளங்களும், சக்தியும் உள்ள இராணுவத்தினர் ஈடுபட்டு, உதவத் தொடங்கியிருக்கிறார்கள்.
இன்று திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அதன் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப் அவர்களின் தலைமையில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. பல வைத்திய அதிகாரிகள், தாதிய, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பல்வேறு தரத்திலான இராணுவ அதிகாரிகள், வீரர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இராணுவத்தினர் இந்த பணியை முன்கொண்டு செல்வதில் மனம் மகிழ்வடைகிறது. மருத்துவ அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இவைகளை சாத்தியப்படுத்த உதவியதற்கு. பயணிப்போம்.
No comments:
Post a Comment