Tuesday, June 2, 2020

முதியோர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அநாதரவானவர்கள் மேலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

முதியோர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அநாதரவானவர்கள் மேலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
அண்மையில் நாவலடியில் உள்ள கவிஞர், எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத் அவர்களின் விருந்தினர்களுக்காகவும், இலக்கிய நிகழ்வுகள், கலந்துரையாடல்களுக்காகவும் கட்டப்பட்ட, ”ஸஹ்வி கார்டன்” என்ற இயற்கையும், அமைதியும் பசுமையும் சூழப்பெற்ற விடுதியில், ”சமூகத்தில் அநாதரவாக கைவிடப்பட்ட முதியோர்களை இன, மத பாகுபாடுகளுக்கு அப்பால் விடுதி ஒன்று அமைத்து பராமரித்தல்” என்ற தலைப்பில் மிகவும் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
முதியவர்கள் வீடுமாறுதல், இடம்பெயர்வு, மக்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து ஓட்டாண்டியாதல், அநாதரவாதல், வாழ்க்கைத்துணையின் மரணம், சுகாதாரநிலை, உடல்நிலை, உளநிலை, தளர்ச்சியுறும் உடல்நலம், பராமரிப்பு, சமூகநிலை, கலந்துரையாடல், அவர்களைக் கொண்டாடல், அவர்களின் அறிவைக் கொண்டாடுதல், மற்றவர்களால் உதாசீனப்படுதல், பொருளாதார ரீதியில் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, , குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுதல், பிறரோடு ஒன்ற முடியாத நிலை, பிறர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகுதல், வாழ்க்கையில் பிடிப்பின்மை அல்லது அலுப்பான சூழல், அனுமதி, சட்டம், தொடர்ச்சியான நிலைபேறு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. நாவலடியில் தற்போது அமைக்கப்பட்டுவரும் முதியோர் இல்லத்தின் கட்டட வேலைகள் 2020 ஆரம்பத்தில் நிறைவு பெற்று செயற்படத் தொடங்கும். அடைமழைக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த இந்தக் கலந்துரையாடலை முதியோர் இல்ல அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஏபிஎம். நவாஸ் நெறிப்படுத்த, எழுத்தாளர்களும், கவிஞர்களுமான எஸ்எல்எம். ஹனிபா, எஸ். நளீம், ஓட்டமாவடி அறபாத் போன்றோர் தங்களின் முக்கியமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். நானும் வழங்கினேன். இறுதியில் அறபாத் தயாரித்து தந்த இஞ்சி பிளேண்டி அந்த அடைமழையால் கவிந்த மாலையை பொன் மாலை பொழுதாக்கியது. முதியோர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆதரவற்ற முதியோர்கள் மேலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...