Amritha Aye
December 13, 2019 ·
இன்று செங்கல்லடி- பதுளை வீதியிலுள்ள கரடியனாறு மகா வித்தியாலயத்தில் அந்தப் பாடசாலையின் சுற்றாடல் கழகம், சுகாதாரக் கழகம் போன்ற அமைப்புக்களின் மாணவ அங்கத்தவர்களுடன் ஒரு கலந்துரையாடலும், விதைப்பந்துப் பயிற்சிப் பட்டறையும் இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் திரு. உ. உதயசிறிதர் அவர்களின் ஏற்பாட்டில், கல்லுாரியின் முதல்வர் திரு. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலைக் கழகங்களின் அறுபதுக்கு மேற்பட்ட மாணவ அங்கத்தவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்குபற்றியிருந்தனர். காடுகள், வனமீளுருவாக்கம், உயிரினப்பல்வகைமை, யானைகள், மாசடைதல், பொலித்தீன், பிளாஸ்ரிக், விதைப்பந்துகள், சாதாரணதர, உயர்தர பாடசாலை சுற்றாடல் திட்டங்கள், ஜனாதிபதி பதக்கம், ஜனாதிபதி தொப்பி, இவைகளை பல்கலைக்கழக நுழைவுக்கு பயன்படுத்துதல் போன்ற பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பின்னர் மாணவர்களுக்கு விதைப்பந்துகள் செய்து காட்டப்பட்டன. அவர்கள் சுமார் 1500 க்கு மேற்பட்ட பந்துகளை குறுகிய நேரத்தில் செய்து முடித்திருந்தார்கள். இந்த 60 மாணவர்களும், பாடசாலையிலுள்ள மற்ற மாணவர்களுக்கு வளவாளர்களாக மாறி, இந்தப் பருவத்தில் சுமார் பத்து இலட்சம் விதைப்பந்துகளை உருவாக்க திடசங்கற்பம் பூண்டார்கள். அதற்குரிய வேலைத் திட்டங்களை உடனே செய்யத் தொடங்கியிருந்தார்கள். நண்பர் உதயசிறிதரும் அதற்கு உடனே ஆவன செய்யத் தொடங்கியிருந்தார். அந்தப் பாடசாலையின் தன்னலமற்ற, வினைத்திறனான அதிபரும் ஆசிரியர்களும், அதற்குதவியாகவுள்ள மாணவர்களும், பெற்றோர்களும் இந்த இமாலய இலக்கை சாத்தியப்படுத்துவார்கள் என்று மிகவும் திடமாக நம்புகின்றேன்.
No comments:
Post a Comment