Tuesday, June 2, 2020

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புணாணை பிரதேசத்தின் மீள்வனமாக்கல்


Amritha Ayem is with Slm Hanifa and 2 others.
January 8

நேற்றும் ஒரு அதிஸ்டமான நாளாக அமைந்தது. கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையினர், அந்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டொக்டர். ஏ.எல்.எப். றகுமான் அவர்களின் பணிப்பிலும், வழிகாட்டலிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் புணாணை பிரதேசத்தின் மீள்வனமாக்கலின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான புங்கை, புளி, இலுப்பை, காயா, பலா, நறுவிளி, மஞ்சாடி, நாவல், வம்மி, மருதை போன்ற பல வகையான மரங்களை நடுகை செய்தனர். இந்நிகழ்வில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையைச் சேர்ந்த டொக்டர் இலாஹி (வைத்திய அதிகாரி, நிருவாகம்), டொக்டர் ஆர்.ஏ. நியாஸ் அகமட் (வைத்திய அதிகாரி, தரநிர்ணயம்) உட்பட பல உத்தியோகத்தர்களும், ஊழியர்களும், மட்டக்களப்பு வன பரிபாலன திணைக்களத்தைச் சேர்ந்த பிரனீத் சுரவீர (மாவட்ட வனபரிபாலன அதிகாரி), ஏ. ஜாயா (உதவி மாவட்ட பரிபாலன அதிகாரி), திரு. தணிகாசலம் (வாழைச்சேனை வட்டார வனபரிபாலன அதிகாரி), ஏ.எச்.எம். கியாஸ் (தொப்பிகல பகுதிக்கான வனபரிபாலன அதிகாரி), ஊழியர்கள் போன்ற பலரும் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்விற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வனபரிபாலன திணைக்களத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள். பேண்தகு அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதியின் வளம்பெறும் நாட்டிற்கு பலன்தரும் மரங்கள் என்னும் தொனிப்பொருளின் இலக்கை அடைந்து கொள்வதற்காக கடுமையாக உழைக்கும் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையினரையும், மருத்துவ அத்தியட்சகரையும், அவரது குழுவினரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.





























No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...