இலங்கை விமானப்படைக்குப் பிறகு விதைப்பந்துகளை பாவித்து இலங்கையின் வனங்களின் அளவை அதிகரிப்புச் செய்வதில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இலங்கையில் இரண்டாவது அரசாங்க நிறுவனமும், ஒரு முன்னோடி வைத்தியசாலையுமாகும்.
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டு வாயுவை கட்டுப்படுத்துவதில் அல்லது குறைப்பதில் வைத்தியசாலைக்குள் வகிக்கின்ற பங்குகள் பற்றி ஏற்கனவே பல தடவைகள் குறிப்பிட்டிருக்கின்றேன். அதற்கு அவர்களுக்கு ஜனாதிபதி பசுமை விருது தங்கம் கிடைத்திருக்க வேண்டும். எனினும் வெள்ளியே கிடைத்தது. அடுத்தமுறை தங்கத்தை தக்கவைத்துக் கொள்வார்கள்.
இன்று இந்த வைத்தியசாலைக்கு மிக முக்கியமான நாள். இலங்கையின் வனங்களின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கெடுக்குமுகமாக இன்று இலங்கையின் காடு மீளுருவாக்கத்தில் நேரடியாக கால் பதிக்கின்றது.
இன்று விதைப்பந்து திருவிழா ஒன்றை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்எல்எப். றகுமான் அவர்களின் பணிப்பின் பேரில் அந்த வைத்தியசாலையின் தரநிர்ணய முகாமைத்துவத்திற்கு பொறுப்பான டொக்டர் ஆர்.ஏ. நியாஸ் அகமட் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். மிகவும் மகிழ்ச்சியாக எல்லோரும் பங்குபற்றியிருந்தனர். வளவாளராக நான் பங்குகொண்டிருந்தேன். முடிவில் நுாற்றுக்கணக்கான விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டிருந்தன. இலங்கையின் வனங்களின் அளவை அதிகரிப்புச் செய்வதில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒரு முன்னோடி வைத்தியசாலை என்றால் அது மிகையில்லை. விதைப்பந்துகளை பாவித்து வனமீளுருவாக்கம் செய்வதில் இந்த வைத்தியசாலை இலங்கையில், இலங்கை விமானப்படைக்குப் பிறகு, இரண்டாவது அரசாங்க நிறுவனமாகும்.
எந்த ஆரோக்கியமான, நல்ல விடயத்தையும் முன்னெடுப்புச் செய்வதற்கு எப்போதும் தயார்நிலையிலிருக்கும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்எல்எப். றகுமான் அவர்களும், அவரின் பணிப்பை நிறைவேற்ற காத்திருக்கும் டொக்டர் ஆர்.ஏ. நியாஸ் அகமட் போன்ற உத்தியோகத்தர்களும், மற்றும் ஊழியர்களும் இந்த அடைவுக்கு காரணம் என்றால் அது மிகையில்லை.
No comments:
Post a Comment