Monday, June 1, 2020

சமீப நாட்களாக எனது காலை களப் பயணங்களில் ஒரு வகை புகையை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. அது எங்களது தமிழில் ”பனி” என்று கூறுவார்கள். ஆனால் அது பனி இல்லை. ஏனெனில் அதனைச் சுவாசிப்பதற்கு விருப்பாக இருப்பதில்லை. இன்றும் எனது வேலை செய்யும் இடத்திற்கு வேலைக்கு செல்லும்போது, மாவடிப் பள்ளிப் பகுதியில் வீதயெங்கும், வயலெங்கும் புகையாக இருந்தது. டெல்லி மாசு இங்கும் வந்துவிட்டது. நாடுகளுக்கு அரசியல் எல்லையே இருக்கின்றதே தவிர சூழலியல் எல்லைகள் இல்லை. சூழலியல் நோக்கில் உலக ஒரு பிரதேசம் போன்றது. ஒரு மூலையில் ஏற்படுத்தப்படும் பாதிப்பு இன்னொரு மூலையைப் பாதிக்கும். கப்பலின் அடித்தட்டு ஓட்டையானால் என்ன நாங்கள் மேல் தளத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் உள்ளவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது எமது உலகு. நாங்களும் ஆபத்திலிருக்கிறோம்.











No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...