Tuesday, June 2, 2020

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லுாரி உயர்தரப் பிரிவின் 2003ம் ஆண்டு பழைய மாணவர்கள்

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லுாரியில், உயர்தரப் பிரிவில் 2003ம் ஆண்டு தங்களது கற்கையை மேற்கொண்ட, அந்தக் கல்லுாரியின் பழைய மாணவர்கள் அமைப்புகளில் ஒன்றான ”SMC 03’ Batch” யின் வருடாந்த மூன்றாவது ஒன்றுகூடல் மட்டக்களப்பு புளு லகூன் விடுதியில் (Blue Lagoon Rest In) நேற்று நடைபெற்றது. அந் நிகழ்வில் என்னையும், வேர்கள் அமைப்பினரையும் (பிரதம செயற்பாட்டாளர் ஆசிரியர் றமேஸ் சிவஞானம் உட்பட மேலும் மூன்று செயற்பாட்டாளர்கள்) விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். பசுமையாக்கல் நடவடிக்கை சம்பந்தமாக ஒரு உரையாற்றினேன். பின்னர் ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. எங்களது பணிகளுக்கு ஒத்துழைத்து முன்னெடுத்துச் செல்வதற்கு பல்வேறு விடயங்களை முன்மொழிந்தார்கள். மிகவும் உயிர்ப்பான நிகழ்வாக அது அமைந்து முடிந்தது. பல துறைகளிலும் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களைக் கொண்ட அமைப்பு அது. அவர்களுக்குள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் பழகியதும், பழையதை மீட்டதும், குதுாகலித்ததும் மிக மகிழ்வான அழகிய தருணங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. வழமையாக கூடிக் கலையும் பத்தோடு பதினொன்றான பழைய மாணவர்களின் அமைப்புகள் போலில்லாமல், சமூகத்திற்கும், சுற்றுச்சூழலிற்கும் தங்களாலான பணிகளை செய்ய முன்வந்திருப்பது அவர்கள் மேலுள்ள மரியாதையை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றது. உண்மையில் நீங்கள் முன்னுதாரணமானவர்கள். மட்டக்களப்பின் அழகிய பிள்ளைகள். வரலாறு உங்களை எழுதிச் செல்லும்.

















No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...