Thursday, December 26, 2019

அம்ரிதா ஏயெம்-ன் கதை மிகப்பெரிய சங்கதிகளைச் சொல்லும்

-ஆபிதீன்


‘ரியாஸ் அஹ்மத் (அம்ரிதா ஏயெம்) மிக புதுமையான கதை சொல்லி. அதிகமான கதைகள் விலங்குகளுடனான உரையாடல்தான். இலங்கை சரித்திரத்தை தெரிந்தவர்களுக்கு ‘குளம்’ கதை மிகப்பெரிய சங்கதிகளை சொல்லும்’ என்கிறார் நம் ஹனிபாக்கா அவர்கள் .  சரித்திரம் எனக்கு சரியாகத் தெரியாது; ஆனாலும் , இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் விரிவுரையாளராகப் பணிபுரியும் சகோதரர் ரியாஸ்-ன் இந்தச் சிறுகதையைப் படித்ததும் நினைவுக்கு வந்தது ஒரு சினிமா வசனம். ’மறுபிறப்பு என்கிற விஷயத்தை யோசித்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது; மீண்டும் நமக்கு பிரியமான மனிதர்களை சந்திக்கலாம், இல்லையா?’ என்று கேட்பவளிடம் , ‘ஒருவேளை நீ எறும்பாக பிறக்க நேரிட்டால்?’ என்று கிண்டல் செய்வான் கணவன்.
’அதுவும் நல்லதுதான். சுறுசுறுப்பாக, ஒற்றுமையாக , கூட்டத்துடன் வாழலாம்.’
‘நீ நசுக்கப்படுவாய் பரிதாபமாக’.
’மனிதர்களும் நசுக்கப்பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்!”
சினிமா எது என்று தேடுங்கள். அதற்கு முன் , நசுக்கப்பட்டவர்களின் கதையைப் படியுங்கள் – நசுக்குபவர்கள் சார்பாக. ஹனிபாக்காவும் நண்பர் யோகராசாவும் நடுவர்களாக இருந்து தேர்வு செய்த கதை இது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் கிழக்கொளி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறது.  தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வெளிவந்த கதையாம். அதுவரை நான் என்னசெய்து கொண்டிருந்தேன்? இதுக்குத்தான் ஹனீபாக்கா வேண்டுமென்பது! அவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சிறுகதையை அனுப்பிய ரியாஸுக்கு நன்றி.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...