Thursday, December 26, 2019

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்: செய்னம்பு நாச்சியார் மான்மியமும், கூர்ப்பும், செவ்வியல் நடத்தையியலும் பாடத்திட்டமும்.

- அம்ரிதா ஏயெம்

இன்று காலை நடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பொன்விழா மாநாட்டில் ஒருவர் வாசித்த கட்டுரையில், செய்னம்பு நாச்சியார் மான்மியம் போன்ற காவியங்களை அகீதாவிற்க முரணாக இருப்பதால் தடை செய்ய வேண்டும் என்று கட்டுரை முழங்கினார் (அவர் வாசிக்கவில்லை, ஒரு அரசியல் வாதிபோல சத்தம்போட்டு குரலை ஏற்ற இறக்கங்களுடன் சுட்டுவிரலை நீட்டி நீட்டி (தேiவியல்லாமல் சுட்டுவிரலை நீட்டுவது கூட குற்றம்). கட்டுரை என்பது வாசிப்பது. பேசுவதோ அல்லது முழங்குவதோ அல்ல.
செய்னம்பு நாச்சியார் மான்மியம் காத்தான்குடி அப்துல் காதர் லெப்பை புலவரின் அங்கதச் சுவையுள்ள முஸ்லிம்களின் வாழ்வியலின் குறுக்கு வெட்டுமுகத்தை படம்போட்டுக் காட்டும் தவிர்க்கமுடியாத மிக முக்கியமான விகடகாவிய வகையைச் சேர்ந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகும். இதனை தடைசெய்யக்கோருவதும், அதற்கு அகீதா பார்வை பார்த்து அதனை தூக்கியெறிய முற்படுவதும் மாநாட்டின் நோக்கங்களின் அடிப்படையை தகர்க்கும், அறிவீனமான பார்வை என்றே எனக்கு தெரிகிறது.
ஒரு பேச்சுக்கு அவ்வாறு தடுக்கப்பட வேண்டியது என்றாலும் ஏன் அதனை நாங்கள் ஏன் படிக்க வேண்டும் அல்லது பாடத்திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என்பது பற்றிய அலசலே இந்த தலையங்கம்: இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்: செய்னம்பு நாச்சியார் மான்மியமும், கூர்ப்பும், செவ்வியல் நடத்தையியலும் பாடத்திட்டமும்.
மாணவர்களுக்கு கூர்ப்பு கற்பிக்கும் போது, லாமார்க்கின் கொள்கையை கற்பித்துவிட்டு அது பிழை தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற சொல்லிவிடுவோம். அவ்வாறே டார்வினை கற்பித்துக்கொடுக்கும் போது, டர்ர்வின் காலத்தில் பரம்பரையலகுகள் பற்றிய கண்டுபிடிப்புகள் இல்லாததால், அவரின் கொள்கைகள் பலவும் பிழை என்று சொல்லிவிட்டு, அதனை மென்டலின் பரம்பரையலகு விதிகளுடன் சேர்த்து நியோ டாவினிசம் கற்றுக் கொடுப்போம்.
அதே போல நடத்தையியலின், செவ்வியல் நடத்தையியலில், Instinct, Instinctive Behaviour Patterns (IBP), Fixed Action Patterns (FAP), Sign Stimuli, Innate releasing mechanism (IRM), Motivation: போன்றவைகளை கற்றுக்கொடுத்துவிட்டு, இறுதியில் அவைகள் யாவும் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று முடிப்போம். ஏன் அவைகள் கற்பிக்கப்படுகின்றது என்றால், அதற்கு அடுத்து ஏற்றுக்கொள்ளப்படுகிற கற்கை விடயங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாத விடயங்கள் மிக அவசியமானதாகும்.
இந்த அடிப்படையில் நீங்கள் அகீதா கொண்டு நிராகரிக்கின்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், நீங்கள் சொல்கின்ற நல்ல இலக்கியங்களை கற்பதற்கு மிக முக்கியம் என்ற காரணத்திற்காவது, ஒரு பேச்சுக்காவது செய்னம்பு நாச்சியார் போன்ற இலக்கியங்களை அனுமதியுங்கள். நம்மை அழிப்பதற்கு இன்னொருவர் தேவையில்லை நாமே போதும்.
(27.11.2016)

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...