-அம்ரிதா ஏயெம்

யுவனேஸ்வரி என்ற இயற்பெயரையுடைய கவிஞை ஊர்வசி யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள கருகம்பனையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பௌதிக விஞ்ஞான பட்டதாரியான இவர் கிழக்கு மாகாணம் காரைதீவு> மருதமுனை பகுதிகளில் ஆசிரியையாகவும் அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி> மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி போன்றவைகளில் விரிவுரையாளராகவும் பின்னர் மட்டக்களபு;பு கல்வியயற் கல்லூரியின் பிரதி பீடாதிபதியாக கடமையாற்றி ஓய்வுபெற்றார். பெண் என்ற அடையாளத்தைக் கொண்ட ஊர்வசியின் கவிதைகளை விட்டுவிட்டு தமிழின் பெண் கவிதைப் பரப்பையும் அரசியல் கவிதைப் பரப்பையும் கதைக்க முடியாது. அவரது பழையதும் பதியதுமான கவிதைகள் தொகுப்பாக இன்னும் வராத சேதிகள் என்ற பெயரில் காலச்சுவடு வெளியீடாக (2014) வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment