Thursday, December 26, 2019

இலங்கையி்ன் பறவை வலசைப் பாதைகள்



- ஏ.எம். றியாஸ் அகமட்

https://web.facebook.com/photo.php?fbid=10209709082146698&set=a.1296790302732.2041451.1319608745&type=3&theater
(1)
இலங்கைக்கு பிரதானமான மூன்று வழிகளில் பறவைகள் தங்களுடைய நாட்டிலுள்ள தகால காலத்தை (குளிர் காலத்தை) கழிப்பதற்காக இடம்பெயருகின்றன.
அ) மேற்குப் பாதை: ஐரோப்பா, மேற்கு ஆசியா, மேற்கு சைபிரியா, நாடுகளிலுள்ள பறவைகள் மேற்கு ஹிமாலயா, காஸ்மீர், மேற்கு விந்திய மலை, குமரிமுனை, வழியாக யாழ்ப்பாணம், மன்னார், வில்பத்து, கல்பிட்டி, சிலாபம், பெலன்வில, ஹிக்கடுவ அடைகின்றன.
ஆ) கிழக்குப் பாதை: கிழக்காசிய நாடுகள், கிழக்கு சைபீரியா, மங்கோலியா நாடுகளிலுள்ள பறவைகள் கிழக்கு ஹிமாலயா, கிழக்கு விந்திய மலை, ராமேஸ்வரம், வழியாக யாழ்ப்பாணகு;டா நாடு, யாழ்ப்பாண வாவி, ஆனையிறவு, சுண்டிக்குளம், பாணமை, குமண, யால, புந்தல, கல்மிட்டியாவ, ரெக்காவ அடைகின்றன.
இ) அந்தமான் பாதை: தென்கிழக்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள் நாடுகளிலள்ள பறவைகள் அந்தமான் தீவுகள், வழியாக முல்லைத்தீவு, கிழக்கிலங்கை அடைகின்றன.
பெரும்பாலான பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரத்தை ஒரேதடவையில் நிறுத்தாமல் பறந்து முடிக்கின்றன. தகாத காலம் வரும்போது அதனை கழித்து, இனம்பெருக்கி குஞ்சுகளை தங்களது பிறந்த இடத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதற்கு, தங்களது முன்னோர்கள் மி;ல்லியன் கணக்கான வருடங்கள் செய்தது போன்று பல இரவுகளும், பகல்களும் நிறுத்தாமல் பறந்து தங்களது இடம்பெயருகின்ற இடத்தை அடைகின்றன. சுமார் குறிப்பிட்ட 2-3 மாதங்களுக்கு அங்குள்ள தாவர விலங்குகளுடன் இயற்கைச் சமனிலைக்குள்ளான ஒரு உணவுச் சங்கிலியை பரிணாமத்தில் உருவாக்கி வைக்கின்றன. உதாரணமாக மீன்களை பிடித்து உண்ணும் போது, இயற்கை மீன் குடித்தொகை கட்டுப்படுத்தி, பறவைகளின் கழிவிலிருக்கின்ற பொட்டாசியம், பொஸ்பரஸ் அல்காக்களின் வளர்ச்சியை தூண்டி மீன் உற்பத்தியை ஒரு வகையில் கூட்டும். இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. இயற்கையான சூழ்நிலையில் பறவைகள் மீன்களை பிடித்து சாப்பிடுவது பிரச்சினையான விடயமல்ல.

(2)
ஆனால் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற வகைகளில் இயற்கையான நிரோடும் வழிகளை அடைத்தல், தமிழக மீனவர்களின் “காட்டுமிராண்டித்தனமான” மீன் பிடிமுறைகள் போன்ற பலகாரணிகள், பறவைகளினால் மீன்வளம் குறைவதற்கான காரணங்களுக்கு வலுச் சேர்க்கலாம். அதை உருவாக்கியவர்கள் மனிதர்களாகிய நாங்களே. எங்கோ ஒரு அமைதியின்மை ஏற்பட அமைதியான இடங்களிற்கு இடம்பெயர்வது இயல்பு.
(3)
பயிர்களைக் காப்பாற்ற பறவைகளை விரட்டலாம், பெரியளவிலும், சிறியளவிலும் செய்கை பண்ணப்படும் மீன், இறால் பண்ணைகளில் இவைகளைக் காக்க, வலையால் பாதுகாத்து, பறவைகளை விரட்டலாம். ஆனால் ஏன் களப்புகளிலும், நீர் ஏரிகளிலும் விரட்ட முடியாது என்ற கேள்வியில் எளிதில் நிராகரிக்க முயடிhதபடியான ஒரு கனதி இருக்கின்றது.
(4)
ஆனால் இலங்கையின் திணைக்களங்களில் மிகவும் தாழ்நிலையிலுள்ள திறனும், போலியான தரவுகளும் நிறைந்த ஒரு திணைக்களம் இதனுடன் சம்பந்தப்படுவதாலும், பறவைகளை விரட்டுவதற்கு முன்னுள்ள நூற்றுக் கணக்கான பிரச்சினைகளில் இவர்களுக்கு ஆர்வம் இல்லை என்பதாலும், இது எந்தளவு சாத்தியம் என்பதை எதிர்வுகூறுவது கொஞ்சம் கடினமான விடயம்தான்..
-அம்ரிதா ஏயெம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...