- அம்ரிதா ஏயெம்
காலையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழா மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் பின்வரும் விடயங்களை கட்டுரை வாசித்தோர்கள் தொட்டிருக்க வேண்டும். அவர்கள் இதிலுள்ள அறிஞர்களின் பெயர்களை பகிடிக்கும் தொடவில்லை என்பது ஒரு கவலையான விடயமாகும்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
1951ம் ஆண்டுஇ இலங்கை பல்கலைக்கழகத்தினால் திரு. வி. செல்வநாயகம் என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட நூலில் முஸ்லிம்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் பற்றியும்இ தமிழ் வளர்த்த முஸ்லிம்கள் பற்றிய வரலாறும் எழுதப்பட்டிருக்கவில்லை. அதேவேளை இந்நூல் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளிலும் பாடநூலாக இருந்தது. அப்போது அது முஸ்லிம்களை கொஞ்சம் கிளர்ந்தெழச் செய்தது எனலாம். அதன் காரணமாக எம்.எம் உவைஸ் என்பவர் பல்வேறு ஆய்வுகளைச் செய்தார். இதற்கு உறுதுணையாக பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ்இ பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றோர் இருந்தார்கள். அல்லாமா உவைஸ் அவர்களின் முதுமானிக்குரிய அய்வப்பத்தபத்தை கலஹின்னையை சேர்ந்த எஸ்.எம்.கமால்தீன் கல்ஹின்னை தமிழ்மன்றத்தினால் பதிப்பித்தார. இதனைக் கண்ணுற்ற தமிழ்நாட்டு வையாபுரிப்பிள்ளையும் அகமகிழ்ந்து மிக்க பாராட்டினார். காரணமாக பதியுத்துpன் மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்த காலத்திதல் தமிழ் மொழிப் பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டது. தமிழ் இலக்கியம் (அ) பாடத்திட்டம்இ (ஆ) பாடத்திட்டம் எனவும், மாணவர்கள் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாமிய இலக்கியத்தினையும், தமிழ் இலக்கியத்தினையும் வேறுவேறாக பயின்று பரீட்சைக்கு தோற்றினர்.
இதன் பிறகு மருதமுனையில் 1966ம் ஆண்டு உலகின் முலாவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடக்கத் தொடங்குகின்றது. அன்றிலிருந்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற ஒன்றை ஒரு சாரார் நிறுவவும், இன்னொரு சாரார் அதனை எதிர்க்கவும் முனைகின்றனர். தேர்ந்த வாசிப்பும் இலக்கிய போக்குகளோடும் பரீச்சயமான ஒரு இளைஞர் குழு இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பதில் வருகின்ற தமிழ் என்பதே அதிகாரத்தவத்தின் இன்னொரு வடிவம், எனவே அதனை நீக்கம் செய்துஇ அதனை முஸ்லிம் தேசிய இலக்கியமாக மாற்றம் செய்ய வேண்டும் என்று களத்தில் நின்றது. நவாஸ் சௌபி எழுதிய முஸ்லிம் தேசிய இலக்கியம் என்ற நால் இங்க முக்கியத்துவமான ஒன்றாகம். முஸ்லிம் எழுத்துக்கள் ஈழத்தமிழ் இலக்கியத்திற்குள்ளும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குள்ளும் அடக்க முடியாத காரணங்களையும், முஸ்லிம் தேசிய இலக்கியத்திற்கள் அடக்கப்பட வேண்டும் என்ற காரணங்களையம் தருக்கரீதியாக முன்வைக்கின்றது.
No comments:
Post a Comment