Thursday, December 26, 2019

அம்ரிதாஏயெம் (Amritha Ayem) என்கிற றியாஸ் அகமட்: எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அரிதான அறிவாளுமை.




அம்ரிதாஏயெம் (Amritha Ayem) என்கிற றியாஸ் அகமட்: எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அரிதான அறிவாளுமை.
- சிறாஜ் மஸ்ஹீர்
அது எங்களது எல் காலம். 1989 என்று நினைக்கிறேன். அம்பாறை டீ.எஸ். சேனநாயக்க வித்தியாலயத்தில் சார்க் சம்பந்தமான வினா விடை போட்டியொன்று நடந்தது. அப்போதுதான் நண்பர் றியாஸ் அஹமட்டை முதன் முதலாய் சந்திக்கிறேன். அன்று தொடங்கிய நட்பு இன்று வரை இனிதாய் நீடிக்கிறது. என் சமவயதுக்காரர். 1973 இல்தான் நாங்கள் பிறந்தோம்.
றியாஸ் மிகச் சிறந்த தட்டச்சுக்காரர். Typewriter இல் வேகமாக type செய்பவர். அப்போதிருந்த ரோணியோ பிரதிபண்ணும் முறையில் புகுந்து விளையாடுபவர். அசாதாரணமான அறிவும் ஆற்றலும் கொண்ட ஒருவர். பொது அறிவிலும் போட்டி நிகழ்ச்சிகளிலும் கலக்குபவர். பல்துறை ஆற்றல் மிக்கவர்.
நான் சரிநிகரில் கவிதையும் கட்டுரையும் எழுதிக் கொண்டிருக்கையில், றியாஸ் சிறுகதையும் கட்டுரையும் எழுதிக் கொண்டிருந்தார். பல இடங்களில் பார்வைகள் ஒன்றித்தன. ரசனைத் தேர்வுகளிலும் ஒரு நெருக்கம் இருந்தது. தீவிர வாசகனான அவரை, இன்னொரு வாசக மனத்தால்தான் சரியாக உணர முடியும்.
அவருடைய பல்கலைக்கழக நாட்களில் அசாதாரணமான ஆற்றல் மிக்க விலங்கியல் துறை மாணவராகப் பரிணமித்தார். குரங்கு, ஓணான், தேரை, மீன்...போன்ற விலங்குகளை எந்த அசூசையுமின்றி தொட்டுப் பிடித்துக் கையாளுவார். இப்படியான ஆட்களை நம் மத்தியில் காண்பது மிக அரிது. அவரை விநோதமாகப் பார்த்தவர்களே அதிகம். அதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு, தன் பணியில் ஆழ்ந்து ஈடுபடும் முனைப்புக் கொண்டவர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், விஞ்ஞானமாணி பட்டம் பெற்று முதல் தரத்தில் சித்தியெய்தினார். இப்போது அங்கு விலங்கியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணிபுரிகிறார். சொற்பகாலம் தென்கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலும் விரிவுரையாளராக இருந்தார்.
விஞ்ஞான முதுமாணி பட்டத்தை ( MSc by Research) - University of Wits, Johannesburg, South Africa இல் Behavioural Genetical Evolution துறையிலும், முது தத்துவமாணியை (MPhil) Behavioural Ecology துறையில் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தேர்ந்துள்ளார்.
நம் மத்தியில் இன்றும் செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலியலாளர்களுள் றியாஸ் அஹமட் மிக முக்கியமான ஒருவர்.
நண்பர் றியாஸ் அஹமட் எழுதியுள்ள 'சூழலும் சுரண்டலும் ஏகாதிபத்தியமும்' (Environment, Exploitation and Imperialism) என்ற நூல் மிக முக்கியமான ஒன்று. "சூழலியல் ஏகாதிபத்தியம், உயிர்-தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியவாதம், முதலாளித்துவச் சூழலியல் சிக்கல், செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல் போன்ற பல்வேறு தலையங்கங்களில்' அவ்வப்போது எழுதிய பத்திகளின்/ கட்டுரைகளின் தொகுப்பு இது. சூழலியலின் மீது ஆர்வமுள்ள அனைவரும் படிக்க முக்கியமான வேண்டிய நூல். குறிப்பாக சூழல் சமநிலையைப் பயங்கரமாகப் பாதிக்கும் 'அரசியலைப்' புரிந்து கொள்ள இது பெரிதும் உதவும்.
சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை அவருடைய வார்த்தையிலே மேற்கோள் காட்டுவதே பொருத்தம். நூலின் தொடக்கத்தில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:
"சூழலிலிருந்து வளங்களையும், நன்மைகளையும் பெறுவதோடு சூழலோடு பொதுமக்களின் தொடர்பு முடிந்து விடுகிறது...சுற்றுச் சூழல் என்பதே வாழ்க்கையாகும். கல்விக்கும், இதர செயற்பாடுகளுக்கும் அடிப்படையான ஒரு விடயமாகும். சுற்றுச் சூழல்தான் உணவு தருகிறது. உடை தருகிறது. உறையுள் தருகிறது. ஔடதம் தருகிறது. இன்னோரன்ன பிறவும் தருகிறது. சுற்றுச் சூழல் இன்றி மருத்துவம் இல்லை. கால்நடை இல்லை. விவசாயம் இல்லை. விலங்குகள் இல்லை. தாவரங்கள் இல்லை. இரசாயனங்கள் இல்லை. வர்த்தகம் இல்லை. நிருவாகம் இல்லை. நிதி இல்லை. நீதி இல்லை. அரசியல் இல்லை. சமூகங்கள் இல்லை. தத்துவங்கள் இல்லை. மதங்கள் இல்லை. மொழிகள் இல்லை. கலைகள் இல்லை. ஆக சுற்றுச் சூழல் என்பதே அடிப்படையானது. எனவே, சுற்றுச் சூழல் சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தல் என்பதுவும் மிக அடிப்படையான ஒன்றாகும். "
இந்நூலில் ரியாஸ் அஹமட் பற்றி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விபுலானந்த அடிகளார் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர், அன்புத் தோழர் கலாநிதி சி. ஜெயசங்கர் Sivagnanam Jeyasankarஎழுதியுள்ள முற்குறிப்பு றியாஸைப் புரிந்து கொள்ள உதவும். "உலகந் தழுவி எழும் குரல்களில் நிகழும் செயற்பாடுகளின் கண்ணியாக எங்கள் றியாஸ் அஹமட்' என்று அவர் அதற்கு இட்டிருக்கும் தலைப்பே சுவை மிக்கது. அவர் தொடர்ந்து இப்படி எழுதுகிறார்:
"சமுதாயத்துடன் தொடர்ச்சியான ஊடாட்டத்தை நிகழ்த்தி வரும் செயற்பாட்டாளராகவே றியாஸ் அஹமட்டின் இயக்கம் இருந்து வருகிறது. இவரது ஆய்வறிவுச் செயற்பாடுகள் பங்குகொள் கற்கையாகவும், பகிர்ந்துகொள் கற்கையாகவும் முன்னெடுக்கப்படுவதும் ஆழ்ந்த அவதானிப்பிற்கும், உரையாடலுக்கும் உரியதாகும்.
"றியாஸ் அஹமட்டின் பழகும் இயல்பு, தொடர்பாடும் ஆற்றல், தொடர்ச்சியான தேடல், அவதானம், ஆராய்தல், தெளிவுபடுத்தும் பாங்கு, சமூக நிலைப்பட்ட நோக்கு, நவீன அறிவியலை மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கும் நடைமுறை என்பன அவரைத் தனித்துவமான ஆளுமையாக முன்னிறுத்தி வைத்திருக்கிறது."
பல்கலைக்கழக கல்வியாளர்களிடம் காணமுடியாத பல சிறப்பியல்புகள் கொண்ட இனிய தோழர் றியாஸ் அஹமட். நிறைந்த ஆய்வுத் தேடலும் களச் செயற்பாடும் கொண்டவர். பிரயோக அறிவு நுட்பம் வாய்த்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களுடன் நெருங்கிப் பழகுபவர். வித்துவச் செருக்கு/ காய்ச்சல் சிறிதும் இல்லாதவர். ஆழமான நதியைப் போல அமைதியான சுபாவமும் தெளிந்த சிந்தனையும் கொண்டவர். பழகுவதற்கு மிக இயல்பானவர் என்பதுதான் அவரது மிகப் பெரிய பலம்.
மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட நண்பர் றியாஸ் அஹமட், முக்கியமான சிறுகதை எழுத்தாளர். 'அம்ரிதாஏயெம்' என்ற புனைபெயரில் எழுதும் அவருடைய 'விலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்று' என்ற சிறுகதைத் தொகுப்பு தற்புதுமையானது.
அரங்காற்றுகை, அரங்கச் செயற்பாடுகள் மற்றும் கூத்து போன்ற பாரம்பரியக் கலைகள் குறித்து மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரது கலை, இலக்கிய ஈடுபாடு குறித்து தனியே இன்னொரு பதிவில் எழுதுகிறேன். நம் மத்தியிலுள்ள பல்துறை ஆற்றல் மிக்க அரிதான அறிவாளுமைகளுள் அவரும் ஒருவர்.
அவரைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். எழுத வேண்டிய தேவையும் உள்ளது. நம் மத்தியிலுள்ள பலரும் அவர் பற்றிய போதிய அறிமுகம் இல்லாமலேயே உள்ளனர் என்பது கவலைக்குரியது.
கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மலரான 'உம்மா' வில், தாரிக் ரமழான் பற்றிய மிக விரிவான கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அவர் அதைத் தந்தபோது நான் மிகுந்த ஆச்சரியமடைந்தேன். றியாஸ் இந்தத் துறையையும் விடுவதாக இல்லை.
அடிக்கடி என்னை வியக்க வைக்கிற அறிவுத் தேடலும், ஆர்ப்பாட்டமில்லாத அறிவு நேர்மையும், செயலூக்கமும், கலை இலக்கிய ஈடுபாடும் ஒருங்கு சேர்ந்த இந்த நட்பு, நான் பெறுமதியாக உணரும் நல்ல நட்புகளுள் ஒன்று.
இணைக்கப்பட்டுள்ள படம்: சுமார் 15 வருடங்களுக்கு முன்பு தென்கிழக்குப் பல்கலைக்கழக நிகழ்வொன்றில் நான் உரையாறுகிறேன். நடுவே நண்பர் றியாஸ் அஹமட் அமர்ந்திருக்கிறார். வலதுகோடியில் இருப்பவர் தற்போது யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவியாக பணிபுரியும் கலாநிதி பகீரதி ஜீவேஸ்வரா.






Top of Form
LikeShow more reactions
Bottom of Form

Top of Form
Addalai Nisry அம்ரிதா சேர் அற்புதமானவர்..

Razeen Assan உங்கள் அறிமுகம் அவரைச் சந்தித்து உறவாட வேண்டும் என்ற வேட்கையைத் தருகிறது! நன்றி
 ·

Siraj Mashoor நிச்சயம் சந்திக்க வேண்டிய ஒருவர். சந்திக்க ஏற்பாடு செய்யலாம்.

Sajeeth Amsajeeth அப்ப இருந்த மாதிரித்தான் இப்பவும் இருக்கார். அம்ரிதா சேர்

AK Mujarath எப்போதும் சிரித்த முகம் அவரின் புன்னகை மழையில் நான் களிப்புடன் நனைந்திருக்கிறேன். சிறந்த மனிதர்

Irfan Pmm I have been his admirer from the very beginning of our school life since we were in the same classrooms from grade 1. He seemed to me a unique person from those early days. We separated at O/L for different fields but still I continue to admire him as a multi dimensional genius.

Siraj Mashoor
Siraj Mashoor Nice to hear this Dr. Irfan.
 · Reply · 
1
Amritha Ayem
Write a reply..


Siraj Mashoor
Siraj Mashoor நேற்று Amritha Ayem இன் பிறந்த நாள். அதற்கு அவர் இட்டபதிவிற்கு நான் எழுதிய Comment:

இரவு 1.45 மணியளவில் திடீரென்று கண்விழித்தேன் தூக்கம் தொலைந்து போனது. ஏதாவது படிக்கலாம் என்று தோன்றியது.

அந்த அர்த்த ராத்திரியில் ஜெயலலிதாவின் மரணச் செய்தியைக் கடந்து போனேன். ஆனால், உங்களது இந்தப் பதிவு என்னை நிறுத்தி இப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

ஒரு பிறந்த நாள் பற்றிய குறிப்பாக மட்டும் இருந்தால், சில வார்த்தைகளால் வாழ்த்துச் சொல்லி விட்டு நகர்ந்திருக்கலாம்.

முடியவில்லை றியாஸ். எவ்வளவு வலிகளைச் சுமந்து நிற்கிறீர்கள். மரணமும் இழப்புகளும் சூழ்ந்த இந்த அனுபவங்களால் எனக்கும் வலிக்கிறது. ஒரு வகையான Empathy உணர்வு.

உங்கள் மகளை நேரில் கண்டபோது, உள்ளுக்குள்ளே உடைந்து போனேன். கலங்கியதைக், காட்டிக் கொள்ளவில்லை.

இவ்வளவுக்கு மத்தியிலும் இந்த வாழ்க்கையை எதிர்கொண்டு முன்னே செல்லும் உங்கள் முதிர்ச்சி, அமைதியாக எதையும் எதிர்கொள்ளும் சுபாவம் எல்லாமே, உங்கள் மீதான அன்பையும் மதிப்புணர்வையும் இன்னும் ஒரு படி மேலே உயர்த்துகிறது.

இன்று உங்களைப் பற்றி ஒரு பதிவை எழுத வேண்டும் என்று மனம் சொல்கிறது.

ஹிஜ்ரி கலண்டர்படி, இன்று றபிய்யுல் அவ்வல் பிறை 05. இந்த நாள் எனக்கும் பிறந்த நாள்தான். சம வயதினரான நமக்குள் இப்படி ஒரு Coincidence.

இந்த நாளில் நட்பின் இழை இன்னும் இறுகிப் பிணைகிறது. அன்பென்று சொல்ல இங்கு வார்த்தைகளுக்கு என்ன தேவை வந்தது?
 · Reply · 
8
Arivirutchcham Mullaimaha
Arivirutchcham Mullaimaha போற்றப்பட வேண்டியவர்கள் அவ்வெவ் வேளைகளில் போற்றப்பட்ட வேண்டியவர்கள்-வாழ்த்துக்கள்
 · Reply · 
3
Ahsan Moulana
Ahsan Moulana நிச்சயமாக.. அவர் ஒரு வித்தியாசமான ஆளுமையுள்ளவர். எனக்குத் தெரிந்தவரை அவர்தான் அவருடைய வகுப்பில் முதலாம் பிள்ளையாக எப்போதுமே வருவார். அவரைக் காணும்போதெல்லாம் எனக்கு பலவிடயங்கள் ஞாபகத்திற்கு வரும்..
1.
மிகச் சிறுவயதிலிருந்தே தன்னை மருதமுனை பொதுநூலகத்துடன் இணைத்த நடமாடும் நூலகம்
2.
எவ்வளவோ வற்புறுத்தியும் இரண்டாம் முறை A/L பரீட்சைக்கு தோற்றவில்லையே என்ற கவலை.
அவர் ஒரு வைத்தியராக வந்து, அதில் நிறைய சாதித்து இருக்க வேண்டியவர் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.....
 · Reply · 
5
Manoos Aboobakkar
Manoos Aboobakkar One of my brother
 · Reply · 
3
Slm Hanifa
Slm Hanifa அல்லாஹ் ஒருவன் போதுமானவன் அவனிடமே அவனுக்காகப்பிரார்த்திக்கிறேன்
 · Reply · 
4
Abdul Jameel
Abdul Jameel மனநிறைவைத் தரும் அருமையான பதிவு தோழர் சிறாஜ் அவர்களுக்கு புதுப்புனைவு பதிப்பகம் சார்பாக உளமார்ந்த ஒரு கடல் நன்றி
 · Reply · 
2
Amritha Ayem
Amritha Ayem நன்றி சிறாஜ். நிறைய பாரமான விசயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இவைகள் எனக்கு இன்னும் அந்நியமானவையாகவே இருப்பவைபோல் தெரிகின்றன. இதில் சொல்லியிருக்கிற அவ்வளவும் உங்களுக்கும் பொருந்தும். இந்தப் பதிவுகளையும் இதற்கு வந்த கொமன்ற்ஸ்களையும் எவ்வாறு எதிர் கொள்வது என்றே யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் நீண்டகாலமாக இறுதி வருட மாணவர்களுக்கு ஹியுமன் அனாட்டமி அன்ட் பிசியோலஜி என்ற பாடத்தை நடாத்திக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பகுதி. ஸ்ற்றெஸ் பிசியோலஜி. மகிழ்ச்சியோடும்இ துன்பத்தோடும் சம்பந்தப்பட்ட உடற்றொழிலியல். மனிதனின் மகிழ்ச்சிக்கு டொபாமைன்இ செறற்றோனின்இ ஒக்ஸிரோசின்இ ஈஸ்ற்றோஜன்இ புறோஜெஸ்ற்றோன் போன்ற உயிரிரசாயினிகள் காரணமாக இருக்கின்றன. ஒரு மனிதன் புகழப்படும் போது சுரந்து அவனுக்கு சந்தோசத்தை கொடுப்பது டொபாமைன். துரதிருஸ்டவசமாக ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பாவிக்கும் போதும்இ மூளையின் அதற்குரிய மையத்தில் சுரப்பதும் டொபாமைன்தான். ஆனால் சாதாரண அளவைவிட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகரித்துக் காணப்படும். அடுத்த நாள் மூளை அதே அளவு எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஒரு நாள் ஹெரோயின் எடுக்கத் தவறினாலும்இ பாரிய அசாதாரண நடத்தைகள் மனிதனில் நிகழத் தொடங்கும். தொடர்ச்சியாகவும்இ அதிகமாகவும் புழ்ந்தால் இப்படித்தான் நடக்கும் என்னவோ. இதனால்தான் முன்னோர்கள் புகழும் போதையும் ஒன்று என்றார்கள் என்னவோ.
 · Reply · 
Siraj Mashoor
Siraj Mashoor உங்களது சங்கடம் புரிகிறது றியாஸ். இது மிகைப்படுத்தல் அல்ல. இல்லாததை இருப்பதாய்ச் சொன்னதும் அல்ல. உங்களை புனிதராக்க வேண்டிய தேவையும் இல்லை.

இவை உங்களைப் பற்றிய எனது நீண்ட கால அவதானங்கள் மட்டுமே. சிலவேளை சில தவறுகள் இருக்கக் கூடும். ஆனாலும், இந்தப் பதி...See More
 · Reply · 
4
Amritha Ayem
Amritha Ayem நன்றி சிறாஜ்
 · Reply · 
1
Slm Hanifa
Slm Hanifa Siraj Mashoor "மற்றவர்களைவிட ,நமக்குத்தான்நமது பலவீனம் அதிகம் தெரியும் "உண்மை சிராஜ் !
 · Reply · 
2
Amritha Ayem
Write a reply...

Riyalas AL
Riyalas AL மருதமுனையில் இன்று இருப்பவர்களில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பன்முக ஆளுமைகளில் முதல் வரிசை அவர் எழுதியவைகளை விட எழுதாமல் விட்டவைகளும் எழுத எண்ணி இருப்பவைகளும் ஏராளம் என நினைக்கிறேன் காலம் ஒருநாள் கைகூப்பும் அதுவரை தொடரட்டும் அவர் பணிகள் வாழ்த்துக்கள்
 · Reply · 
3
Thaj Mohamed Mohamed Hafrath
Thaj Mohamed Mohamed Hafrath பகட்டுத் தெரியாத வனாந்தரப் பறவை .. எத்தனை உயரப் பறந்தாலும் சிலு சிலுப்பு கிஞ்சித்தும்மில்லை.
 · Reply · 
6
Munas Kalden
Munas Kalden Hi Siraj, your jotting has scooped up my good memories with and about Amritha dating back to 80s.
 · Reply · 
3
Makki Mahmoud
Makki Mahmoud Siraj MashoorAmritha Ayem உங்களில் யாரையும் நான் நேரில் பார்த்ததில்லை இருந்தாலும் உங்களது பதிவுகளை வாசிக்கும்பொழுது நேரில் கண்டு உரையாடியது போன்றதொரு திருப்தி.
அருகதையே இல்லாதவர்களெல்லாம் அற்ப விடயங்களுக்காக ஓவர் புகழ்ச்சியை எதிர்பார்க்கும் இந்த உலகத்தில், நியாமான பாராட்டுக்களையே ஏற்க தயங்குகின்ற இந்த மனப்பக்குவத்தை எப்படிச் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.
 · Reply · 
2
Muzaumi Samath
Muzaumi Samath Salam sir actually I so far didnt meet you but I expect one article from you, that is non other than "modern teacher" now you may know the rules and lawas for teachers such as no punishment to students ,no question,no fail system. Cant get gift from students .in this situation how a teacher should be .pls sir your suggestion

Siraj Mashoor Jazakallahu khaira sister. Ours is a challenging responsibility. Make dua for us.

Azaath M Haniffa முற்றிலும் சரியான பதிவு.

நண்பர் றியாஸ் -என்னுடன் பிரத்தியேக வகுப்பில் ஒன்றாக கற்ற காலத்தில் அவர் ஒரு புத்தக பூச்சி அல்ல என்பதை அறிந்து கொண்டேன்.
நண்பர் சிறாஜ்- அகில இலங்கை பாடசாலைகள் சூழல் தொடர்பான தொலைகாட்சி வினா விடை போட்டியின் போது அறிமுகமானவர்.

இவர்கள் இருவரும் -பல்கலை ஆளுமைகள்; பொக்கிஷங்கள்.
 · Reply · 
5
Fariz Ahamed
Fariz Ahamed நல்ல நண்பர்களாக இருந்த காலம். ..
 · Reply · 
2
Siraj Mashoor
Siraj Mashoor Azaath M HaniffaFariz AhamedMohamed Ismail Umar Ali பழைய நண்பர்களான உங்களை இங்கு ஒன்றாய்க் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. பாடசாலைக் காலத்து நினைவுகளுடன்...
 · Reply · 
2
Fariz Ahamed
Fariz Ahamed இதில் உங்கள் பங்கு அதிகம். ..
 · Reply · 
2
Mohamed Ismail Umar Ali
Mohamed Ismail Umar Ali அப்போதைய வெற்றிகளும் தோல்விகளும் இலக்கியம் விளையாட்டு ,அக்கரைப்பற்று கல்முனை பிரத்தியேக வகுப்புக்கள் என எத்தனையோ பின்னிப்பிணைந்த நினைவுகள்
 · Reply · 
2
Siraj Mashoor
Siraj Mashoor சுவாரசியம் நிறைந்த இனிய நாட்கள்.
 · Reply · 
2
Amritha Ayem
Write a reply...

Suraiya Mubeen
Suraiya Mubeen He was a favourite student of Prof. Man Sabaratnam ad Dr.Meena Dharmaretnam. He was an obedient and keen student.
 · Reply · 
2
Abdul Rasak Abdul Rasak
Abdul Rasak Abdul Rasak விலங்கு மொழியையும் மனித மொழியையும் ஊடாட விட்ட சமூக விஞ்ஞானி என்ற வகையில் எப்போதும் இவர்மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. நிறம் மாறி எழுதுவதில் இவருக்கிருக்கும் தனித்துவ ஆர்வம் பற்றியும் வியந்து வருகிறேன்.
 · Reply · 
4
Fariz Ahamed
Fariz Ahamed Thanks for reminding one of my lost friend. ... he is an extraordinary character. ...
 · Reply · 
2
Mohamed Ismail Umar Ali
Mohamed Ismail Umar Ali உண்மைகளை நீங்கள் எழுதியிருக்கிறீங்க மச்சான்
 · Reply · 
2
Omardeen Abdul Wahab
Omardeen Abdul Wahab Beautifully narrated an unknown truth, Sirarj, you are really a wonderful personality in multifaceted writing,
I really admire you. May Allah bless you by all means.
 · Reply · 
2
ML Mohammed Siraj
 · Reply · 
1
பிர்தெளஸ் அலீறஜாய் அபூஉமர்
பிர்தெளஸ் அலீறஜாய் அபூஉமர் சரிநிகர் காலத்தில் அம்ரிதா ஏயெம் இன் கதை என்றால் அப்படியே படிப்பேன்!
ஏன் மஷ்ஹூர் சரிநிகர் போல ஒன்றை இப்போ செய்யேலாதா!
 · Reply · 
2
Aness Ahamed
Aness Ahamed Very happy to see here one of my direct junior in EUSL life ,of course I found him he was an extraordinary talented guy. May Almighty guide him right path in everything
 · Reply · 
2
Pathman Selvi
 · Reply · 
2
Amritha Ayem
Amritha Ayem நன்றி சிறாஜ். உங்களுடைய இந்தப் பதிவு viber, whatsapp என பல தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த எனது நண்பர்களுக்சிகும், வெளிநாட்டில் வாழும் நண்பர்களக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் விசாரிக்கத் தொடங்குகிறார்கள்.. இந்தப் பதிவு போட்டதிலிருந்து ஏறத்தாழ 100 நண்பர்கள் என்னோடு இணைந்திருக்கிறார்கள். எஸஎல்எம் ஹனிபா எப்போதும் எனக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருப்பவர். யாரையாவது தேடிக் கண்டுபிடித்து எனக்கு புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் அனுப்பி வாசிக்க வைப்பவர். கலாநிதி இர்பான் 20 நுால்களை மொழிபெயர்ப்பு செய்த கவிதையம் இலக்கியமும் தெரிந்த திறமைசாலி. அவரது பகுதி ஒன்று வாழ்க்கை பரத நாட்டியம், டிஸ்கோ, பிரேக் டான்ஸ், பாட்டு, இசை என்பவைகளுடன் சம்பந்தப்பட்டது. அற்புதமான கலைஞன் (எனக்கு இர்பான் ஏசுவது கேட்கிறது). எனது நெருங்கிய உறவினர் முனாஸ் காலடீன், சுயம்புவாய் ஐநா வில் உயர்ந்த இடத்தில் இருக்கும் கவிஞன். ஆசாத் ஹனிபா, உமர் அலி, அஹ்சன் மௌளலானாஇ கலீல் கபூர்- நீங்கள் நல்ல கவிஞர்கள். பாாிசைக் கண்டதில் ஒரு மகிழ்ச்சி. அனஸ் ஒரு திறமையானவர். அம்ஜட்டும் என்னைப் பற்றி சொல்லியிருந்தார். மகிழ்ச்சி. மற்றவர்கள் என்னுடன் வழமையாக துணையிருப்பவர்கள்தான். நேற்றிரவு இந்தப் பதிவுகளைப் பார்த்துவிட்டு அமரிக்காவிலிருந்து தம்பி எங்கள் வீட்டிலிருந்து எங்களுடன் கற்ற இர்சாட் பாவா தொடர்பு கொண்டார் 20 வருடங்களுக்குப் பிறகு. அவரது அன்பு மாறாமலிருந்தது இன்னும். அதை விட முக்கியமானது ஒரு மிக முக்கியநபர் என்னை தன்னுடைய நண்பராக இணைத்துக் கொண்டது. எனக்கு ஒரு பெரிய அறிமுகத்தை கொடுத்து விட்டீர்கள்.சிறாஜ். நன்றி. நீங்கள் சொன்னவைகளுக்குரிய பாத்தியதைகளை நான் நிரூபிக்க முயற்சிக்க வேண்டும் என்பதே எனக்கு முன்னாலுள்ள சவால்கள்.
 · Reply · 
5
Amritha Ayem
Amritha Ayem கடந்த 6 வருட காலமாக நான் மட்டுமே பாவித்து 6 மாதங்களுக்கு முன்னே திறந்துவிட்ட எனது இணையப் பக்கம் www.amrithaam.com யில் எனது சில எழுத்துக்களை பதிவிட்டிருக்கிறேன். உங்களுக்கு வாய்ப்பான நேரத்தில் ஒரு தரம் விசிட் பண்ணி பார்க்கலாம்.


நான் அவ்வப்போது எழுதிய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமா்சனங்கள்,
AMRITHAAM.COM

Hani Nasir அருமையான பதிவு


Bottom of Form


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...