Thursday, December 26, 2019

இன்று மண்டூர் கலை இலக்கிய அவையின் ஏற்பாட்டில், மண்டடூர் சிறி இராமகிருஷ்ண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற கலாநிதி கோணாமலை கோணேசபிள்ளை அவர்களின் ”பலதுறை அறிவுசார் கட்டுரைகள் (கணித, விஞ்ஞான, கல்வியியற் கட்டுரைகள்)” என்னும் நுால் வெளியீட்டின்போது சிறப்புரையை நிகழ்த்தும்போது…
கலாநிதி கோணேசபிள்ளை பற்றி...
மண்டூரைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி கோணேசபிள்ளை மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் கண்டி முஸ்லிம் ஆசிரியர் கல்லூரி, அட்டாளைச்சேனை முஸ்லிம் ஆசிரியர் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாள ராகவும். மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரி அதிபராகவும் பணியாற்றி பின்னர் கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், ஆபிரிக்காவில் உள்ள பொட்சுவானா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பணியாற்றியவர். கொழும்புப் பல்கலைக்கழகம். அவுஸ்திரேலியாவில் உள்ள குயிஸ் லாந்து பல்கலைக்கழகம். மக்குவாறி பல்கலைக்கழகம். அமெரிக்காவில் உள்ள கொலம்பியாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து கல்விமாணி (கணிதம்) முதலாம் வகுப்பு, முது கலைமாணி. முது விஞ்ஞானமாணி. கல்வி கலாநிதி. தத்துவக் கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர். கல்வி மாணி பரீட்சையில் முதலாம் வகுப்பில் சித்தியடைந்ததற்காக மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரி இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கிக் கெளரவித்தது. அமெரிக்காவில் கலாநிதிப் பட்டத்துக்குப் படிக்கும் போது சிறந்த மாணவர் விருது (American Award of Excellence) பெற்றவர். ஆராய்ச்சி நிதியமும் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் சர்வதேசக் கல்வியும் ஐக்கிய நாடுகள் சபையும் என்னும் கற்கை நெறியில் படித்து உச்ச பெறுபேற்றையும் பெற்றவர். 25 வருடங்களாக அமரிக்க கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு, 2009 முதல் மண்டூரில் வாழ்ந்து வருகிறார். பல துறைகளில் பாண்டித்தியமும் அறிவும் மிக்கவர்.






No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...