Friday, December 27, 2019

நாங்கள் - வெப்பம் விரும்பும் பிராணிகள்


- அம்ரிதா ஏயெம்

நமது பரம்பரையலகின் இயல்பு காரணமாக வெப்பக் காலத்திற்கு தாக்குப் பிடிக்கக்கூடியவாறே நாங்கள் இயைபாக்கம் பெற்றிருக்கின்றோம். வெப்பம் காரணமாக, அதாவது நீரிழப்பால் நாங்கள் இறப்போம் என்பதெல்லாம் கொஞ்சம் அதீததமான ஒன்று. எங்களுக்கு எதிரியே குளிர்தான். குளிர்காலம்தான் இறப்புக் கூடிய மாதம். வெள்ளைக்காரர்களுக்கு எதிரியே வெப்பம்தான். அதனால்தான் சித்திரையில் விடுமுறையை உருவாக்கினார்கள். எமக்கு வெப்பம் எதிரி என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட பின்காலனித்துவ சிந்தனை.
வெப்பக் காலம்தான் வசந்த காலம். விலங்குகள் அழைப்பு விடுத்து, சேர்ந்து, இனம் பெருக்குகின்ற காலம். பாரம்பரிய மரங்கள் பூத்து, குலுங்கி, பழுத்து விதைகளைத் தருகின்ற காலம். பரிணாமரீதியாக, வரப்போகின்ற மழை காலத்திற்காக மரங்கள் விதைகளை உருவாக்குகின்ற காலம். நடப்பு முன், பின் மூன்று- நான்கு மாத காலங்கள் அதீத வெப்பம் காரணமாக மர நடுகைக்கும், காடு மீளுருவாக்கத்திற்கும் பொருத்தமற்ற காலம். ஆனால் இந்தக் காலங்களில் மரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விதைகளைப் பெற்று சேமித்திருக்கிறோம். மிக நீண்ட களப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறோம். பல்வேறு வேலைத்திட்டங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம். நேரப் பற்றாக்குறை காரணமாக எல்லாவற்றையும் முகநூலில் பதிவிடமுடியவில்லை. நேரம் கிடைக்கும்போது பதிவிடுவோம். ந்ணபர்கள் செய்யக்கூடியதெல்லாம், முடிந்தவர்கள், இந்தக் காலத்தை தவறவிடாது விதைகளை சேகரித்து எங்களுக்கு உதவுங்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு ஆரோக்கியமான மாற்றத்தின் பங்குதாரர்களாவோம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...