அம்ரிதா ஏயெம் என எழுத்துலகில் அறியப்பட்டவர் றியாஸ் அகமட்.
மருதமுனையைச் சேர்ந்த இவர் நம் மத்தியில் வாழும் சிறந்த சிறுகதை எழுத்தாளரும் சிந்தனையாளருமாவார்.
இப்போது .தென்கிழக்குப் பல்கலைக்க்ழகத்தில் விரிவுரையாளராயுள்ளார்
,அவர்துறை விலங்கியல்
கிழக்குப்பல்கலைக் கழகத்தில் அவர் மாணவராக 2000 ஆம் ஆண்டுகளில் பயின்று கொண்டிருந்தார்
குரங்குகளைப்பற்றி அவதானித்தார்
ஆராய்ந்தார்
ஆராய்ந்தார்
அவர் கண்ட குரங்குலகை எமக்கு அவர் விளக்கியபோது நாம் மூக்கின் மேல் கைவைத்து வியந்து நின்றோம்
அவற்றின் வாழ்வுமுறை பற்றிக் கதைகளும் எழுதினார்
இயற்கையை,
மனிதர்களைச்
சக உயிர்களை
மனிதர்களைச்
சக உயிர்களை
நேசிக்கும் அவர் பண்பு எம்மைக்கவர்ந்தது
அவர் செயற்பாடுகளால் நாம் கவரப்பட்டோம்
உறவு ஏற்பட்டது
அப்போது நான் கிழக்குப் பல்கலைக்க்ழக நுண்கலைத் துறைத் தலைவராயிருந்தேன்,
நாடக விழாக்கள்,கண்காட்சிகள்,கருத்தரங்குகள் இன்னிய அணிகள் என நுண்கலைத் துறை அமர்க்களப்பட்ட காலம் அது
அடிக்கடி எனது அறைக்கு வருவார்,உரையாடுவார்,
குடும்ப நண்பராகவும் ஆனார்
அவர் எழுத்தாற்றலும்
பேச்சுக்களும்
பொறுப்புணர்ச்சியும் புத்திசாலித்தனமும்,
கெட்டிக்காரக்களுக்கேயுரிய கிண்டல் பேச்சும் எனக்குப் பிடித்துக் கொண்டது
பேச்சுக்களும்
பொறுப்புணர்ச்சியும் புத்திசாலித்தனமும்,
கெட்டிக்காரக்களுக்கேயுரிய கிண்டல் பேச்சும் எனக்குப் பிடித்துக் கொண்டது
நான் இராவணேசன் தயாரித்த காலம் அது.
அன்று உதவி விரிவுரையாளர்களாயிருந்த ஜெயசங்க்ர்,
பாலசுகுமார்,
சிவரத்தினம்
ஆகியோருடன் மாணவர்களும் என்னிடம் கூத்துப்பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்
பாலசுகுமார்,
சிவரத்தினம்
ஆகியோருடன் மாணவர்களும் என்னிடம் கூத்துப்பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்
இராவணேசன் தயாரித்தபோது றியாஸை நான்
முகாமையாளராக இருக்கமுடியுமா? மிகவும் பொறுப்ப்பான வேலை என்றேன்
தனக்கேயுரிய கிண்டல் சிரிப்போடு
இருந்துதான் பார்ப்போமே என்றார்
என்ன என்ன செய்ய வேண்டும் என விளக்கிஅவரிடம் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்தேன்
அவருக்கு நாடகம் புதிது,
அதிலும் கூத்துப் பாணியிலான
நாடகம் இன்னும் புதிது.
நாடகம் இன்னும் புதிது.
மாணவர்களும் புதிது. அனைவரும் தமிழ் மாணவர்கள் மாணவிகள்
அனைத்தையும்அனைவரையும் அவர் லாவகமாகக் கையாண்டார்.
அவர் அனைவரினதும் மதிப்பிற்குரியவரும் ஆனார்
பார் வீதியில் இருந்த பல்கலைக்க்ழக உல்லாச விடுதியில் வாரம் தோறும் வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் தங்கி இராப்பகலாக இராவணேசன் பழகுவோம்.
காலையில் 5.00 மணிக்கு எழும்பிவிட வேண்டும் இரவு 10.00 மணிக்குத்தான் படுக்கை
,ஒரு இராணுவக்கட்டுப்பாட்டுடன் பயிற்சிகள் நடைபெற்றன
.எனக்கு லெப்டினண்டாக ரியாஸ்
மிக அதிகாலையில் கலைஞர்களை எழுப்புதல்
அவர்களுக்கானகாலைத்தேநீர்,காலைசாப்பாடு
.இடையில் சிற்றுண்டி
மதிய உணவு
பின்னேரச் சிற்றுண்டி
இரவு உணவு
என அனைத்தையும் ஒழுங்கு செய்தல்,
மதிய உணவு
பின்னேரச் சிற்றுண்டி
இரவு உணவு
என அனைத்தையும் ஒழுங்கு செய்தல்,
மேடைபொருட்களை ஒழுங்கு செய்தல்
எனபன அவரது வேலைகள்
நாடகத்தின் சூத்திரக் கயிறாக இயங்கினார்
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன உறவு என்று கேட்டவரும் உண்டு
அந்த அப்துல் காதர் இல்லாவிட்டால் இந்த இராவணேசன் என்ற அமாவாசை அசைந்திருக்கவே முடியாது
சாப்பாட்டு விடயம் மாத்திரமல்ல ,
பாத்திரங்களுக்கான உடைகளை ஒழுங்கு செய்தல
.அவற்றை ஒழுங்காக எடுத்து வைத்தல்
பின்னர் பாத்திரங்களுக்கு அவற்றை வழங்கல்
எனப்பல பாரிய பணிகளையும் செய்தார்
எனக்கு மிக மிக வலக்கரமாக விளங்கினார்
.இலக்கிய உரையாடல்களும் அரசியல் உரையாடல்களும் அறிவியல் உரையாடல்களும் அதிகரித்தன
குரங்குகள் பற்றிய அறிவும் எனக்கு கூடியது
2000 ஆம் ஆண்டு கிழக்குபல்கலைக்கழக மண்டபத்தில் இராவணேசன் முதல் மேடையேற்றம்
நாடகம் முடிய கலைஞர்கள் அனைவரும் மேடையில் தோன்றி வணக்கமுரைப்பது வழமை
நாடகம் முடிய கலைஞர்கள் அனைவரும் மேடையில் தோன்றி வணக்கமுரைப்பது வழமை
.இறுதியாகத்தான் நான் மேடைக்கு வருவேன்
எனக்கு முன்னால் சென்று றியாஸ் வணக்கமுரைப்பார்..
இதனை அன்று கண்ட அவரது நண்பர்கள் எனக்கு முன்னால் வருவதால் அவரையே நாடகத்தின் நெறியாளர் என மயங்கினார்களாம்.நேரடியாகவும் கேட்டார்களாம்
அவர் தயாரித்த நாடகம் இராவணேசன் என்று அவரை வாழ்த்தினார்களாம்
இதனை றியாஸ் என்னிடம் கூறிச் சிரித்தார்
அதில் ஒருவித பிழையும் இல்லை
அந்த அளவு உழைப்பை அவர் அதில் செலுத்தியிருந்தார்
2002.2005 ஆகிய காலங்களில், எங்களுடன் இராவணேசத்தயாரிப்பில் ஈடுபட்ட இவர் பின் பங்குபெற வாய்ப்பிருக்கவில்லை
2000 ஆண்டுக் காலகட்டத்தில் இராவணேசன் மேடையிடுவதற்கு நான்
எதிர் நோக்கிய சவால்கள் பயமுறுத்தல்கள்,
மறைமுகத் தடைகள்
அதிகம்
எதிர் நோக்கிய சவால்கள் பயமுறுத்தல்கள்,
மறைமுகத் தடைகள்
அதிகம்
அவை அன்று இன்னொரு வடிவத்தில் வந்தன
அச்சாவால்களை நான் எதிர் கொள்கையில் எனக்கு உறுதி தருபவராகவும், சாட்சியாகவும் உடன் நின்றார் ரியாஸ் அகமட்
சில விடயங்களை நாங்கள் மட்டுமே அறிவோம்
2019 2014 களில் புதியவர்களைக்கொண்டு இராவணேசன் பழக்குகையில் அவரை அழைத்துப் பழைய அனுபவங்களைப்பகிரக் கேட்பேன்
.சுவராஸ்யமாக தன் அனுபவங்களைக்கூறுவார்
.சுவராஸ்யமாக தன் அனுபவங்களைக்கூறுவார்
சென்ற வாரம் பேராதனைப் பல்கலைக்க்ழகம் கொண்டு செல்ல மீண்டும் இராவணேசன் பழகினோம்
வந்து ஒருமுறை மாணவர்களுடன் பழைய அனுபவங்களைப் பகிரலாமே என்றேன்
ஒரு நாள் அதிகாலைபயிற்சியின் போது வந்து விட்டார்
நாடகப்பயிற்சி பார்த்தார்.
மாணவர்களுடன் உரையாடினார்
பழைய இராவணேசனை விட மிகவும் வித்தியாசமாக இது இருப்பதனைக் கூறினார்
இராவணேசன் அன்று தனது ஆளுமையினை வளர்க்க எவ்வாறு உதவியது என்றதை விளக்கி
நாடகம் எவ்வாறு பல திறன்களை வளர்க்கு என்பதை ஒரு நாடக விரிவுரையாளரைப்போல விபரித்துக்கூறினார்
பின்னர் மாணவர்களுடன் தனது பழைய அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டார்
சுவையான அனுபவங்கள் அவை
புதிய விடயங்கள் பல கூறினார்.
இராவணேசனுக்கு அன்று ஏற்பட்ட தடைகள் சவால்கள் என்பனவற்றைச் சுவைபட விளக்கிய பின்
18 வருடங்களுக்கு முன் நாடகம் பழக்கியபோது காலைதொடக்கம் இரவு படுக்கைக்குப் போகும் வரை என்ன என்ன செய்யவேண்டும் என நாம் அமைத்த நேரசூசியையும் பாத்திரங்களுக்குரிய உடுப்பு விபரங்கள் பற்றி மேடைமுகாமையாளர் என்ற வகையில் அவர் வைத்திருந்த குறிப்புக்கொப்பியையும் காட்டினார்
18 வருடங்களாக அந்தக் குறிப்புக்கொப்பிகளை அவர் பாதுகாத்து வைத்தமை கண்டு நானே வியந்தேன்
அதன்மூலம் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் 2000 ஆண்டில் இரண்டாம் தலைமுறை இராவணேசனைப் பழக்கினோம் என்பதை மாணவர் அறிந்தனர்,
வியந்தனர்
இராவணேசனின் இன்றைய வெற்றிக்குப் பின்னால் றியாஸ் அகமட் போன்றவர்களின் பெரும் உழைப்பும் இருகின்றது என்பதுதான் நான் இங்கு சொல்ல வருவது
மிக்க நன்றி றியாஸ்
,என் வார்த்தைக்கு மதிப்பளித்து வந்து உங்கள் அனுபவங்களை எம் மாணவர்களுடன் பகிர்ந்து உற்சாகமூட்டியமைக்கு
உங்கள் வருகை தொடர்வதாக
எமது உறவுகள் மேலும் வளர்வதாக
இன்றைய இளம் தலைமுறை உங்களிடமிருந்து பெற நிறைய இருக்கிறது
மௌனகுரு
---------------------------------------------------------
இரண்டாவது படம் ஞாயிறன்று காலை 5.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை கொடுத்த தொடர்ச்சியான பயிற்சியைக்காட்டும் அன்றைய ஆவணம் இது.மேடைமுகாமையாளர் அகமட் றியாஸ் இன்றும் அதனைப்பேணி பாதுகாத்து வைத்துள்ளார்
---------------------------------------------------------
இரண்டாவது படம் ஞாயிறன்று காலை 5.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை கொடுத்த தொடர்ச்சியான பயிற்சியைக்காட்டும் அன்றைய ஆவணம் இது.மேடைமுகாமையாளர் அகமட் றியாஸ் இன்றும் அதனைப்பேணி பாதுகாத்து வைத்துள்ளார்
No comments:
Post a Comment