Thursday, December 26, 2019

அம்ரிதா ஏயெம் என்கின்ற ரியாஸ் அகமட்



-ஸபறுல்லாஹ் காசிம்

நான் சொல்லுவதெல்லாம் உண்மை……………உண்மையை அன்றி வேறில்லை என்று உங்கள் அனைவர் முன்னாலும் சத்தியம் செய்து கொண்டு…………….அத்தியின் மீது சத்தியமிடுகின்ற அல்லாஹ்வின் மீது சத்தியமிடுகின்றேன் கீழ்வரும் மன வார்த்தைகள் என்டி முகஸ்துதி வைைரஸ் போடப்பட்டு கிளீன் பண்ணப்பட்டது.
அண்மைக்காலமாகத்தான் எனக்கும் அம்ரிதாவுக்குமிடையிலான ஸ்நேகம்.அவர் பாஷையில் ஓர்கனிக் பசளை சகிதம் முளைத்து இன்று ஒரு மரமாய் வளர்ந்து நிற்கின்றது. ஒரு குறுகிய காலத்துக்குள்ளான எனக்கும் அம்ரிதாவுக்குமிடையிலான கட்டுச்சாதத்துடனான பயணம் பல கட்டுகளை உடைத்து ஆத்மார்த்தமாக ஃபெக்ட் தொட்டு ஃபிக்ஷன் வரை பேச வைத்திருக்கின்றது.
ஆரம்பத்திலேயே ஒன்றைக் குறித்துக் கொள்ளுங்கள்அம்ரிதாவுக்குள்ளிருக்கின்ற புனைவாளனை விட யதார்த்தங்களையும் விஞ்ஞான உண்மைகளையும் புதையல்களாக தனக்குள் வைத்திருக்கின்ற நிகழ்வாளனைத்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவருக்குள்ளே இருக்கின்ற வெறும் இலக்கியம் என்பதனை விட விஞ்ஞானமும் மெய்ஞானமும் சம அளவில் மிக்சாகி தெறிக்க விடுகின்ற இலக்கியமும் அதன் மீதான உரையாடலும் எனக்கு ஓல் டைம் ஃபேவரைட்.
அம்ரிதா பற்றி எழுத ஆரம்பிக்கும் போது எனக்குள்ளிருந்து கொண்டு அசரீரி இப்படி மேற் சொன்னது மாதிரி தொடங்கு என்று எனக்கு கட்டளையிடுகின்ற கொமான்டர் இன் சீஃப் ஆக மாறி விடுகின்றது. தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விலங்கியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக மிருகங்கள் மீது காருண்யம் காட்டுகின்ற டிஸ்கவரிகளுக்கு விலங்குகளின் மொழியைக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்ற அம்ரிதா எனக்குள்ளே ஒரு எனிமல் ப்ளனட்டையே எனிமேஷனில் ஓட விடுகின்றார்.
.
அவரோடு பேச ஆரம்பித்தால் புரியும் இலக்கியம் தாண்டி நீண்டு விரிகின்ற அவரது விஞ்ஞான உலகமும், உளவியல் கூறுகளும், ஒரு சின்ன நிகழ்வுக்கும் பகுத்தறிவு ரீதியில் அவர் அனலைஸ் பண்ணி அந்த நிகழ்வுக்கு விஞ்ஞானத்தைப் பொறுத்தி விடுகின்ற அந்த புலமைத்துவம் எனக்குள்ளே பல வேளைகளில் புளகாங்கித சுரப்பிகளை ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்திருக்கின்றன.
பொதுவாகவே வெறும் புனைவு என்றும் தங்களை அக்மார்க் புனைவாளர்களென்றும் அடையாளப்படுத்துகின்ற ஃபென்டஸி பிரம்மாக்களை எனக்கு பிடிபப்தில்லை. அவர்கள் வெறுமனே ஈர்ப்பு விசையற்ற கற்பனை கிரகத்திலேயே எப்போதும் மிதந்து கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களின் உரையாடல் ப்ளஸ் எழுத்துகள் அஞ்சு நிமிஷ செக்ஸ் மாதிரி. அவ்வளவுதான்..அஞ்சு நிமிஷத்துக்குப் பிறகு வெடித்து விடுகின்ற ஓர்கசத்துக்குப் பிறகு அப்படியே கால்களை மடக்கி ஒருக்களித்துப் படுத்து விடுகின்ற மாதிரித்தான் புனைவுகளின் பரவசம். அந்தப் புனைவாளர்களால் மூகத்தில் கத்தரிக்காய் சூத்தையைக் கூட பார்க்க முடியாது.
இந்த இடத்திலிருந்து தனது புள்ளியை வேறோர் வடிவில் டிசைன் பண்ணிக் கொள்ளுகின்ற அம்ரிதாவின் எழுத்துகள் எப்போதும் ரியலிசத்தின் அலையன்ஸ் குழுமம். நான் ஏற்கெனவே சொன்னது போல விஞ்ஞானத்தோடு சேர்ந்து செல்லுகின்ற அவரது எழுத்துகளும் பேச்சுகளும் இன்னும் போதிய வெளிச்சம் பெறாத பாதரசங்கள்.
இன்டலெக்ச்சுவல் லிஸ்டில் இருந்தாலும் எப்போதுமே தனன்டக்கத்தோடு தானுண்டு தன் பணியுண்டு என்று சிம்பள் என்ட் ஹம்பளாக சென்று கொண்டிருக்கின்ற அவரது இயல்பான தன்மைதான் அவருக்கும் அவரது அற்புதமான எழுத்துகளுக்கும் இன்று வரை மெர்க்குரி நியான் விளக்குகளால் அங்கீகரிக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். இத்தனை இருந்தும் தன்னிடம் எதுவுமேயில்லை என்ற கோடுகளில் மாவிலைத் தோரணம் கட்டுகின்ற அம்ரிதாவின் அப்சலியூட் பியூட்டியே அதுதானென்பேன். கற்பனையில் எக்குத் தப்பாய் ஓரிரண்டு புத்தகங்களை போட்டு விட்டு தன்னை நவீன உலகின் இலக்கிய டிராகன் என்று தம்பட்டத்தை தாரை தப்பட்டை அடித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய கலியுகத்தில் தனது சிம்பொல் தன்னடக்கமே என்று புன்னகைத்தவாறு தன் பாட்டில் சென்று கொண்டிருக்கின்றார் அம்ரிதா.
அதுதான் அவரது இன்ஸ்டிங்ட்.
2002ம் ஆண்டு மூன்றாம் மனிதன் வெளியீடாக வந்த அவரது விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் சிறுகதைத் தொகுி ஒரு அற்புதமான டிஸ்கவரி உலகை சேட்டிலைட் சிருங்காரம் செய்த எழுத்து டைனோசர். ஆனாலும், இலங்கையின் தமிழ் இலக்கியச் சூழலில் அந்தத் தொகுதி ஏன் போதிய கவனிப்பைப் பெறவில்லை என்பது தொடர்பில் ஒரு கொமிஷன் போட்டு புலன் விசாரணைகள் செய்யத்தான் வேண்டும். வேண்டுமென்றே விலங்கு நடத்தைகளால் கொண்டவர்களால் திட்டமிட்டு இருட்டடி கொடுக்கப்பட்ட தொகுிகளுல் அம்ரிதாவின் விலங்குகள் தொகுதியும் வரும். எதையுமே ப்ளான் பண்ணி லஜக் புஜக் லொஜக் செய்வதற்கு நமது இலக்கிய விஷச் சூழலுக்கு என்ன பேப்பர் கிளாஸ் எடுத்தா சொல்லிக் கொடுக்க வேண்டும். எக்ஸ்போர்ட் கொலிட்டியில் அதற்கெல்லாம் இங்கே எக்ஸ்பேர்ட்டுகள் ஏராளம்.
இன்னொன்றை இங்கே நான் கட்டாயமாக சொல்லியே தீர வேண்டும்..அண்மையில் வாசித்த மிகக் கனதியான புத்தகங்களுல் இதே அம்ரிதாவின்……மன்னிக்க வேண்டும் அம்ரிதா என்கின்ற . எம். றியாஸ் அகமடின் (B.sc Special (Hons) (EUSL), M.Sc. (Wits, RSA), சிரேஷ்ட் விரிவுரையாளர், விலங்கியற் துறை, கிழக்கு பல்கலைககழகம்) சூழலும் சுரண்டலும் ஏகாதிபத்தியமும் (Environment, Exploitation and Imperialism) ஒரு பெரும் கவனிப்பையும் பாரிய அவதானத்தையும் கொடுக்க வேண்டிய நூல்.
நவீன கோப்ரேட் உலகில், மனிதனின் அற்ப ஆசைகளுக்காக குளோபல் வோர்மிங்குக்குள்ளே சின்னா பின்னப்பட்டு பூமியே ஒரு விற்பனைப் பண்டமாக மார்க்கட்டிங் வெலியூவுக்ககு கன்வேர்ட் பண்ணப்பட்டுள்ள இன்றைய நச்சுச் சூழலுக்குள்ளே எவ்வாறு இயற்கையும் பூமியின் வளங்களும் தொன்மங்களும் காசு என்ற ஒரே காரணத்துக்காக பகற் கொள்ளை செய்யப்படுகின்றது என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற இந்த நூல் முழுச் சமூகமும் வாசித்து விழித்துக் கொள்ள வேண்டிய டோர்ச் லைட்.
ஆனாலும் இந்த நூலும் கூட நம் தமிழ் பேசும் மகான்களுக்கு மத்தியில் இன்றைக்கும் நொட் ரீச்சபிள்தான். தமிழில் சூழலியல் சம்பந்தமாக வந்துள்ள மிக அரிதான நூல்களுல் முதன்மையிடம் இந்த நூலுக்குத்தான். இதனை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க் வேண்டிய பொறுப்பு நம்மணைவருக்கும் இருக்கின்றது. இருக்கப்பட்ட கொக்கா மக்கா கற்பனை புனைவுகளால் சோடிக்கப்பட்ட புனைவு நூல்களை கையில் வைத்துக் கொண்டு வட்டமாக ஒரு பத்துப் பெர் உட்கார்ந்து கதை அளந்து பல மணி நேரத்தை படு கொலை செய்வதனை விட இந்த மாதிரியான நூல்களுக்கு நேரம் ஒதுக்கி கதையாடலும் உரையாடலும் செய்தால் அது ஒரு இபாதாவாகவே மாறி விடும்.
அம்ரிதா என்கின்ற ஆளுமை நான் ஏற்கெனவே சொன்னது போல புகழையும் பொப்புலாரிட்டியையும் ஒரு கையால் ஒதுக்கி வைத்து விட்டு இன்றைக்கும் நகர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு ஆழமான நதி. இது என் பார்வை மட்டுமே. அண்மையில் இஸரேலில் தீப் பற்றி சர்வதேசத்தை உதவிக்கு அழைத்த போது அந்தத் தீ விபத்துக்க ஆயிரம் பேர் தமது அனுமானங்களை பக்கம் பக்கமாக எழுததித் தள்ளிக் கொண்டிருந்த போது இந்த் தீ விபத்துக்கு அங்குள்ள தட்ப வெப்ப சூழலுக்கும் கால நிலைக்கும் முரணாக வளரக்கப்பட்ட பைன்ஸ் மரங்களே காரணமென்று மிகத் துல்லியமாக தனது விஞ்ஞான மற்றும் சூழலியல் ஆய்வினை அம்ரிதா எழுதியிருந்த போது இவர் வெற மாதிரி லெவலில் எனக்குத் தெரிந்தார். ஆய்வுகளுக்குள்ளாலான அவரது அந்த எழுத்து புனைவுகளை புறந் தள்ளி நிஜங்களால் வாசகர்களை இந்தா எழும்பு என்று தட்டி எழுப்பியது.
அண்மையில் அம்ரிதா, ஜெமீல் மற்றும் குர்ஷித் மூவரும் எனது வீட்டுக்கு வந்திருந்த அந்த அற்புதமான தருணத்தில் நாங்கள் அனைவரும் மாபிள் பீச்சக்கு குளிக்கச் சென்றிருந்தோம். மற்றெல்லோரும் மாபிள் பீச் பளிங்கில் தண்ணீர் துவைத்துக் கொண்டிருக்க நாம் மட்டும் ஹைட்ரோலஜி, எக்குவாட்டிக் ரிசோர்சஸ், எக்குவா ஃபீனா, கடற் தாவரங்கள், மீன்கள், கடல் ஆழம், பென்ஸ் அடித்தல், கிராம்ப்ஸ் கிலி, நேவிக்காரர்கள், மூதூர் லோன்ச் மூழ்கிய கதை, கடலின் டீ என் மற்றும் ஆர் என் , H2O மூலகங்களை உடைத்து அதற்குள்ளே நுழைந்து கொள்ளுகின்ற வித்தை, என்று மணிக்கணக்கில் கதை நீண்ட போது கடலை மானசீகமாக காதலிக்க ஆரம்பித்திருந்தேன்.
தண்ணீரின் மீதான பயம் போய் யாருமற்ற கடலில் நீரோடும் மீன்களோடும் சேர்ந்து கொண்டு கடலில் கூத்தடிக்க வேண்டுமென்ற பேராசையை உருவாக்கி விட்டார் அம்ரிதா. பொதுவாக எனக்கு விஞ்ஞானம், சூழலியல், பௌதீக உடற் கூற்று வியல், மனித மருத்துவம், டீ என் மற்றும் ஆர் என் , கலெக்ஸி, ஏலியன்ஸ், ஃபார்மகோலஜி, போன்றவற்றில் அதி தீவிரமான ஈடுபாடு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது. அவ்வப்போது தொலைபேசுகின்ற போது அம்ரிதாவும் நானும் புனைவுகளை விட விஞ்ஞானத்தையும் விலங்கு ஆராய்சச்சியையும் தாவரங்களின் ஒளித்தொப்பு பச்சையம் பற்றியே அதிகம் பேசியிருக்கின்றோம்.
அம்ரிதாவோடு நான் மேற் சொன்ன சமாச்சாரங்களை இன்டர்மிசன் ஏதுமின்றி பேசிக் கொண்டேயிருக்கலாம். எழுத்து, விலங்கியல் என்ற எல்லைகளைக் கடந்து சமூகத்தின் மீதான தீராத காதலையும், அநீதிகளுக்கதெிராக தனியே நின்றேனும் போராடுகின்ற வயல்ட் லைஃப் வைராக்கியத்தையும், நீிதிக்ககா ஒற்றையாகவேனும் குரல் எழுப்புகின்ற துணிவையும் பல தடவைகளில் நானே கண் கண்ட சாடசியாக இருந்து பாரத்திருக்கின்றேன் அம்ரிதாவிடம். அது பற்றி என்னோடு அவர் நிறையப் பேசியிருக்கின்றார்.
அவரோடு நெருங்கிப் பழகுகின்ற அரிதான சிலருக்கு இந்த ஃபெக்ட் ஃபைல் எக்ஸ் ஃபைலாகத் தெரியும். ஆனாலும் தனது அற்புதமான ஆழமான எழுத்துகளை வைத்துக் கொண்டு எப்படி அவர் இது வரை பப்ளிஸிட்டி வைரல் தேடிக் கொள்ளவில்லையோ அது போலத்தான் அவரது சமூகத் தளத்திலான செய்றபாடுகளும் சிபீஐ சீக்ரெட்டாகவே இன்று வரை இருந்து வருகின்றன.
அது அவரது ஹை புரொஃபைல். அம்ரிதாவின் சமூகச் செயற்பாடுகளும் அநீதிக்கெிராகவும் அதிகாரத்துக்கதெிராகவும் கிளர்ந்தெழுகின்ற அவரது மனோ நிலையும் எனக்குத் தெரிந்த மட்டில் அபாரம். அல்லாஹ்விடம் மட்டுமே வெகுமதிகளை எதிர்பார்த்திருக்கின்ற ஆளுமை. அவரை வல்ல அல்லாஹுத்தஆலா பொறுந்திக் கொள்ளட்டும்.
அம்ரிதாவின் சூழல் மீதான, அதன் வனப்பு மீதான தீர்த்தக் கரை தீராக்காதலும், விலங்குகள் மீதான வேட்கையும், கடல் மீதான காமமும், தன்னைச் சுற்றி இருக்கின்ற காற்று மற்றும் இன்ன பிற இத்யாதிகள் மீதான கருணையும் எல்லையற்ற வெளிகளைக் கொண்டவை. அவர் சூழலின் ஷாஜஹான். விலங்குகளின் தாஹ்மகால். கடலின் ரோமியோ.
அந்தளவுக்கு இந்த சூழல் மீதும் அதன் மீதான உயிர்ப் பல்வகை மீதும் உசிரையே வைத்திருக்கின்றார். சூழல் மற்றும் பூமி மீதான இந்த ஆறாக் காதல்தான் அவரை அது சார்ந்து இன்னும் எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் என்ன……….மனுஷன் தொடரந்து எழுத மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றாரே. நிறைய அவரிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்……..ஆனால் எதிர்பார்ப்புகள் மீதே எதிர்ப்பிலக்கியமம் செய்கின்றார். நிறைய எழுதுங்கள் பாஸ்.
அம்ரிதாவுக்கு அல்லாஹுத்தஆலா இலக்கியம் என்பதனை விடவும் ஆரோக்கியமான துறை சார் அறிவை வாரி வாரி வழங்கியிருக்கின்றான். வெறுமனே கற்பனைகளை வைத்துக் கொண்டு எழுத்து விற்பனை செய்கின்ற கேட்டிலிருந்து அல்லாஹுத்தஆலா அவரை பாதுகாத்திருக்கின்றான். எனவேதான் அம்ரிதாவிமமிருந்து இந்த சமூகத்துக்கு வர வேண்டிய சமாச்சாரங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அவரால் இந்த சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியதும் பெற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கின்றன. மாறாக வெறும் கற்பனையையோ அல்லது வெறும் கையால் முழம் போடுகின்ற புனைவையோ அல்ல. அம்ரிதா இலக்கியக் கிறுக்குத் தனங்களிலருந்தும், இலக்கிய தத்து பித்துகளிலிருந்தும் ஒரு வழியாக தப்பித்துக் கொண்டவர். எனவே அவர் புனைவுகளுக்கப்பால் நின்று கொண்டு நிறைய எழுத வேண்டிய தேவை இந்த சமூகத்துக்காக வேண்டி இருக்கின்றது.
அம்ரிதா ஒரு புத்தி ஜீவி என்ற அடிப்படையில் அவர் போன்றவர்களால் ஆகக் குறைந்நது சமூகத்தில் ஒரு மெல்லிய கோட்டளவாவது மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதுதான் அவர் போன்ற துறை சார் நிபுணர்கள் தான் கற்ற கல்விக்கும் அதனை அள்ளி வழங்கி அவருக்கு அபரிதமான நுணுக்க அறிவால் ஆசிர்வாதம் செய்த அல்லாஹ்வுக்கும் இந்த முஸ்லிம் உம்மாவுக்கும் செய்கின்ற மிகப் பெரிய தொண்டு.
ஆனால் எனக்கொரு மனக்குறை உண்டு. அண்மைக்காலமாக அம்ரிதா சிறு கத்துக் குட்டிகளின் புனைவுப் பிரதிகளையும், சிறுமிகளின் பிரதிகளையும் சற்று தூக்கலாக எடுத்துக் கொண்டு அது பற்றி கொஞ்சம் ஓவர் டோசாக எழுதுவதும், அது பற்றி உரையாடுவதுமாக இருப்பதனைக் காணுகையில் மனசுக்குள்ளே ஒரு நெருஞ்சி அப்படியே நெறஞ்சி. இது எனது பார்வை மட்டுமே. அவர்களை தட்டிக் கொடுங்கள்……ஆனால் தட்டிக் கொண்டேயிருப்பது போலத் தெரிகின்றது.
மாத்திரமன்றி அண்மைக்காலமாக யாரோ எழுதிய கறி வேப்பிலைக்கும் உதவாத பிரதிகளை பேசி தனது நேரத்தின் ஆர்ட்டரிசை கைது செய்கின்றாரோ என்று கவலையாக இரக்கின்றது. இது எனது தனிப்பட்ட கவலையும் அனுமானமும் மாத்திரமே. என்ன செய்ய வேண்டும் ஏது செய்ய வேண்டுமென்று முடிவெடுக்கின்ற தெரிவுச் சுதந்திரம் அம்ரிதாவுக்குண்டு.
ஆனால் மற்றவர்கள் போலல்லாமல் அம்ரிதாவை வேறு கோணத்தில் நான் பார்த்துப் பழகி விட்ட படியால்தான் இந்தத் துயரும் மனக் கஷ்டமும். அம்ரிதா என்ற ஆளுமை இந்த சமூகத்துக்கு முற்று முழுதாக பயன்பட வேண்டும். அவரது எழுத்துகளுக்கு அல்லாஹ்வும் சமூகமும் எதிர்பார்க்கின்ற உயிர் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன்.. அதனால்தான் இந்த ஆதங்கம்.
அல்லாஹுத்தஆலா அம்ரிதாவின் மீது தனது கருணையை பொழியட்டும் என்ற பிரார்த்தனைகளோடு
கிண்ணியா சபருள்ளாஹ்
2017-01-14
.
Image may contain: 1 person, standing, sky, cloud, outdoor and nature

Top of Form
LikeShow more reactions
16 Comments
Comments
Riyalas AL
Riyalas AL இரண்டாம் தரமாய் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
Anbu Mohideen Rozan Akther
Anbu Mohideen Rozan Akther Bro superb analyze abt the Multiple personality and great human
Amritha Ayem
Amritha Ayem I still wonder your ability of prompt speech without having any notes. you are such a talented person with great memorypower
Like · Reply · 1 · March 9 at 8:20pm
Amritha Ayem
Write a reply...

Niyaz Ahamed Zainulabdeen
Niyaz Ahamed Zainulabdeen an intellectual review
Thaj Mohamed Mohamed Hafrath
Thaj Mohamed Mohamed Hafrath His writings much more needy for all but not reached. Yes we have the responsibility to introduce . Thanks Sabarullah Caseem
Amritha Ayem
Amritha Ayem Thanks Hafrath for your inspiring lines. We have been keeping in touch for more than 15 years
Like · Reply · 1 · March 9 at 8:22pm
Amritha Ayem
Write a reply...
Abdul Jameel
Abdul Jameel ஓரு போதும் தன்னை முன்னிலைப் படுத்த விரும்பாத
தன்னடக்கமான ஆழுமை என்பதனை விடவும்
மிகச் சிறந்த தந்தை அவர்
Amritha Ayem
Amritha Ayem நீங்களும் மிகச் சிறந்த தந்தைதான்
Like · Reply · 1 · March 9 at 8:22pm
Amritha Ayem
Write a reply...
Ukuwelai Akram
Ukuwelai Akram அம்ரிதா ஏயெம், உக்குவளையூர் அம்ரிதா.பெயர்களில் சிறு ஒற்றுமையுடன் ஒரே ஆண்டில் இருவரும் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறோம்.அவரைப்போலவே அவரது சிறுகதைத்தொகுதியும் ஆழமானது. அது வெளிவந்த காலப்பதுதியும், அவ்வகையான கதைகளை உள்வாங்கும் தேர்ச்சியான வாசக பரம்பரை அருக...See More
Amritha Ayem
Amritha Ayem ஆரம்ப காலங்களில் பல்வேறு பெயர்களில் அடையாளம் கண்டு பிடிக்கமுடியாதபடி எழுதிக் கொண்டிருந்தேன். பெயர்கள் மாறிக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் ஜெயசங்கர், ஒரு நிலையான பெயருக்கு என்னை வரும்படி ஆலோசனை கூறினார். வாப்பாவின் பெயர் Ahamed Mohaideen, உம்மாவின் பெயர் பரிதா. வாப்பாவிலுள்ள முதல் இரண்டு எழுத்துக்களையும், உம்மாவிலுள்ள கடைசி இரு எழுத்துக்களையும் சேர்த்து அம்ரிதா உருவாகியது. என்றாலும் அந்த நேரத்தில் மூன்றாவது மனிதன் பௌசர், உக்குவளை அக்ரம் போன்றவர்கள் அம்ரிதா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்ததால் எனது முதல் எழுத்துக்களையே பின்னால் போட வேண்டி வந்தது. இதுதான் அம்ரிதா ஏயெம் பெற்றோர்களிலிருந்து பிறந்த கதை. ஆசிப் எனது உறவினர். எனக்கும் சந்தித்த ஞாபகம் இருக்கிறது. நீங்களும் ஆளுமைதான். நான் தொடரும் உங்களுடைய எழுத்துக்களினாலும், பதிவுகளினாலும் அதனை நிருபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
Like · Reply · 1 · March 9 at 8:33pm
Ukuwelai Akram
Ukuwelai Akram நன்றி.
அல்ஹம்துலில்லாஹ்.
Amritha Ayem
Write a reply...
Alari Rifas
Alari Rifas தப்பி நீங்க நல்ல கெமிக்கல் எல்லாம் மிக்ஸ் ஆக்கி எழுதுறிங்க சயன்ஸ்ஸும் படிச்சதா
Amritha Ayem
Amritha Ayem சபருல்லா காசிம், விஞ்ஞானம் படிக்க ஆசைப்பட்டவர். அப்படிப் படித்திருந்தாலும் அதிலும் ஒரு கரை காணக்கூடியளவு ஒரு கடல் திறமைகளைக் கொண்டவர். நிறைவேறாத அந்த ஆசைகளை தனது சுயவாசிப்பின் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
Amritha Ayem
Write a reply
Abu Shiraf
Abu Shiraf அம்றிதாவை நினைக்கும்போது
பெருமையாக இருக்கிறது.
Amritha Ayem
Amritha Ayem குடும்பத்தின் ஜீன்களிலிருந்து பெற்றுக்கொண்ட நேர்மை, முகாமைத்துவத்திறன், செயலுாக்கம், பிறர்நலன் பேணல் போன்றவைகளும் காரணமாக இருக்கலாம்.
Amritha Ayem
Write a reply..

Valleeth Mohamed
Valleeth Mohamed வேகமும்,விவேகமும் ஒருங்கே அமையப்பெற்ற பிறருக்கு உதவும் மனம் கொண்ட, உயர் குணங்கள் நிறையவே உள்ள செயல்வீரர்...
Amritha Ayem
Amritha Ayem உங்களுடன் சேர்ந்து வேலைசெய்யும் போதெல்லாம் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டே இருக்கிறேன். இருவரும் ஒரு விடயத்தை எடுத்து ஒரே மாதிரியாக முடித்தாலும், உங்கள் அணுகுமுறை, செயலபடுத்தும் முறை அலாதியானதும், கற்றலுக்குமுரியதும்.
Like · Reply · 1 · March 9 at 8:43pm
Amritha Ayem
Write a reply...
Munas Kalden
Munas Kalden எனக்கு றியாஸ் எண்டாதான் உணர்வோடப் படுகிறது. அம்ரிதாவை சரிநிகரிலும் மூன்றாவது மனிதனிலும் வாசிச்சிருக்கிறேன். சிறு வயதில் அவரின் வீட்டில் விளையாடி இருக்கிறேன்.
Unlike · Reply · 1 · March 9 at 8:51pm · Edited
Amritha Ayem
Amritha Ayem நெருங்கிய உறவினர்களாலானாலும், எழுத்துக்களுடாகத்தான் உறவாட வேண்டியிருக்கிறது. நீங்கள் யார் என்பதற்கு உங்களது மாணவரின் பதிவு ஒன்றே போதுமானது. மிகவும் கடினமான முயற்சிகளினால் உங்களுக்கான எல்லாவற்றையும் நீங்களே உருவாக்கிக் கொண்ட சுயம்பு. இன்னும் வியக்கிறேன்.
Like · Reply · 1 · March 9 at 8:56pm
Amritha Ayem
Write a reply...
Amritha Ayem
Amritha Ayem அவ்வளவு விரைவாக என்னை விதந்தோதும் வார்த்தைகளுக்கு சலனப்படுவது குறைவு. ஆனால் நீங்கள் எழுதிய என்னைத் தெரியாத சில இடங்கள் எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. மற்றையவை எல்லாம் மிகவும் பாரமான இடங்கள். அவைகளை காப்பாற்ற போராட வேண்டும். சபருல்லாஹ்...See More
Like · Reply · 3 · March 9 at 8:53pm
Munas Kalden
Munas Kalden விரிவுரையாராக இருந்தது தெரியும். அதை விட, வாழ்கையின் அதி உச்ச நெருக்குதலுக்கு உள்ளாகி மீண்டு வந்தவர் Sabarullah.
Unlike · Reply · 1 · March 9 at 8:57pm · Edited
Amritha Ayem
Amritha Ayem ஆமாம்
Like · Reply · 1 · March 9 at 8:57pm
Arafath Sahwi
Arafath Sahwi நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை சபருள்ளாஹ். உண்மைத்தவிர வேறில்லை .ரியாஸ் உண்மையின் நிழல்..
Amritha Ayem
Write a comment...



Bottom of Form


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...