- அனார்

இலங்கைச் சூழலில் வடக்கிலும் கிழக்கிலுமாக சிறுகதைகள் பிரகாசமடைந்து வருகின்ற இன்றைய காலத்தில், கொண்டாடத் தவறிய, வழமையாகக் கூறப்பட்டுவரும் பெயர் வரிசையில் தவிர்க்கப்பட்டு வந்த, ஆனால் கவனித்திருக்க வேண்டிய ஒருவருடைய தொகுப்பு அம்ரிதா ஏயெம்மின் “விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்“ ஆகும்.
அம்ரிதா விலங்குகள் பற்றிப் பேசும்போது மனிதர்களைக் குறிப்பதைப்போலும், மனிதர்களைப் பற்றி பேசும் பொழுது, விலங்குகளை குறிப்பதைப்போலவும் தோன்றுகிறது.
சில சமயம் மனிதர்கள் விலங்குகளைவிட பாவப்பட்டவர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள்.
அம்ரிதாவின் சொற்கள் கதைகளில் முதலையாகவும் மீன்களாகவும் பாம்புகளாகவும் ஊர்கின்றன.
அம்ரிதாவின் சொற்கள் கதைகளில் முதலையாகவும் மீன்களாகவும் பாம்புகளாகவும் ஊர்கின்றன.
கலவர நாட்களில் மனிதர்கள் என்னவாக இருந்தோம் என்பதைப் பேசுகின்றன. விலங்கு நடத்தைகள் மிகைத்திருக்கும் நம் அன்றாடங்களில் நம் மனிதத் தன்மைகளுக்கு எப்படி பச்சோந்தியின் நிறங்கள் ஏற்பட்டன... நமது கருணைக்கும் பெருந்தன்மைகளுக்கும், என்ன விதமான தோல்களை போர்த்தியிருக்கிறோம் என்பதெல்லாம் இத்தொகுப்பு முழுக்க கேள்விகளாகவும் பதில்களாகவும் இடம் பெறுகின்றன.
நம் கதைகளாலான இத்தொகுப்பை புதியவர்கள் அதிகம் வாசிக்க வேண்டும்.
கொண்டாடத் தகுதியான கைகளில் இச்சிறுதைத் தொகுப்பு போய்ச்சேர வேண்டுமென்பதே சக பயணியாக எனது அவா.
No comments:
Post a Comment