Thursday, December 26, 2019

விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்


- மீரான் மைதீன்.


இந்த மாலை , பத்து மாதமாக என் இருப்பிலிருக்கும் அற்புதமான ஒரு நூல் வாசிக்க கைவசமானது.இலங்கை எழுத்தாளர் அம்ரிதா ஏயெம் அவர்களின் "விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் "என்ற சிறுகதை நூல் .2002 ல் முதல் பதிப்பாக வந்திருக்கிறது.
பின் நவீனவாதிகள் இன்னும் தீவிரமாக யதார்த்தத்தை உருச் சிதைப்பதையே இக்காலத்திற்குரிய கலைக் கோட்பாடாக முன்வைக்கின்றனர்.யதார்த்தத்தை அடையாளம் காணமுடியாத அளவிற்கு இந்த உருச் சிதைப்பு நிகழும் போது அவர்களது இலக்கியம்,கலை என்ற நிலையிலிருந்து சொல் விளையாட்டு என்ற நிலைக்கு இடம் பெயர்ந்து விடுகிறது.இளம் தலைமுறையைச் சேர்ந்த நவீன எழுத்தாளர் சிலர் இந்த சொல் விளையாட்டில் அதீத மோகம் கொண்டுள்ளனர்.யதார்த்தத்தின் தீவிர உருச் சிதைப்பையே இவர்கள் தமது கலை வெளிப்பாட்டின் வெற்றியாக கருதுகின்றனர்.அதிர்ஷ்டவசமாக அம்ரிதா ஏயெம் இந்த மோகத்தின் மைய்யத்துள் புகாமல் ஓரத்திலேயே நிற்கிறார்,என அறிஞர் எம்.ஏ.நூஃமானின் முன்னுரைக் குறிப்பை ஆழமாக உள்வாங்கியே வாசிப்பை தொடர்ந்தேன்.
16 சிறுகதைகளைக் கொண்ட இந்த நூலும் ஆசிரியர் அம்ரிதா ஏயெம்மும் பட்டென விலக முடியாத அளவுக்கு வியப்பிலாழ்த்துகிறார்கள்.கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்த எழுத்தின் வீரியம் இரத்தமும் சதையுமாய் துடிப்படங்காமல் இருக்கிறது.கதை பரப்பும்,மொழியும்,சொல்முறையும் இனியும் காலங்களை உண்டு செரித்து புத்தம்புதிதாய் வாசகனை பிரமிப்பிலாழ்த்தும் வல்லமை கொண்டிருப்பதாக கருதுகிறேன்.கதையின் ஊடே அவர் விட்டெறியும் ஒரு சொல் ஒருக்கிலும் நாம் கற்பனை செய்ய இயலாத சித்திரமாய் தலைக்கு மேல பழிப்புக் காட்டி தனி ஆவர்த்தனம் செய்யும் கலாபூர்வமான செயலை நிகழ்த்துகிறது. கதைகள் குறித்து இன்னும் எழுதுகிறேன்.
இந்நூல் ஜூலை 2017 ல் இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது.வெளியீடு புதுபுனைவு பதிப்பகம்.இலங்கை

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...