Thursday, December 26, 2019

கிளாஸ் கிளினர்

-ஏ. எம். றியாஸ் அகமட்

Pterygoplytchthys multiradiatus, mouth sucker cat fish, கிளாஸ் கிளினர். 1880 களில் ஆங்கிலேயர்களால் இந்த மீன் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அலங்கார மீன் வளர்ப்பில் பயன்படுத்துப்படும் இம் மீன் இனம், பின்னர் இது உள்ளுர் நீர்நிலைகளை அடைந்து, உள்ளுர் மீனினங்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் அழித்து, அந்த மீன்களின் உணவுக்கும், இடத்திற்கும் போட்டியாகி, குடித்;தொகையை குறைத்து, மீன்பிடியையும் வெகுவாக குறைத்துள்ளது. இலங்கை உள்ளுர் மீன்பிடியில் மிகமுக்கிய பிரச்சினையாக இந்த மீன் இனம் உருவெடுத்துள்ளது.
மட்டக்களப்பில், யுத்த விமானத்தின் தோற்றத்தில் இருப்பதன் காரணமாக பைற்றர் ஜெற் என
உள்ளுர் மக்களால் அழைக்கப்படுகின்றது. உறுகாமம், உன்னிச்சை குளங்களில் மீன்பிடியில் மிகப்பெரிய வீழ்ச்சியை இம் மீன் இனம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மீனினத்தை அழிக்க முடியாது. ஆனால் மாற்றுவழிகளில் பாவிக்கலாம். கருவாடு, கோழித்தீன். இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் போசணை அளவுகள் (புரதம், காபோஹைட்ரேட், கொழுப்பு, மற்றையவை) கணிக்கப்பட்டன என்னால். ஆனால் வெறுங்கையால் முழம் போடவியலாததன் காரணமாக கிடப்பில் கிடக்கிறது.
மகாவலி கங்கை, கண்டகாடு, பொலநறுவை பிரதேசத்தில் என்னால் பிடிக்கப்பட்ட ஒரு மீன்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...