Sunday, August 1, 2021

தொலைதலின் இனிமை - 20 (பாரம்பரிய சூழலியல் அறிவு (Traditional ecological knowledge)):

-ஏ.எம். றியாஸ் அகமட்

பாரம்பரிய அறிவானது, அது சார்ந்த இடங்களிலுள்ள மனிதர்களுக்கும்,மனிதன் அல்லாதவைகளுக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் சம்பந்தப்பட்ட ஆத்மீக நம்பிக்கைகளுடன் கடத்தப்படுதல் பாரம்பரிய சூழலியல் அறிவு (றெடிஷனல் எகொலொஜிகல் நொலட்ஜ்) எனப்படும். இங்கே மனம், உடம்பு, உணர்வு, ஆன்மா என்பன சம்பந்தப்படுகின்ற, பாரம்பரிய சூழல் அறிவு, நாளாந்த வாழ்வின் வழிபாடுகள், கலாச்சார நடிவடிக்கைகள், பாரம்பரியம், வழக்காறுகள், மனிதர்களுக்கிடையேயான கற்றல்கள், பயிற்சிகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பாரம்பரிய இயற்கை விவசாயமானது கலாச்சார, சூழலியல், ஆத்மீக விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தது. ஆனால் நவதாராளவாதம் விவசாய நலன்கள் முழுவதையும் புறந்தள்ளி சந்தைக்கே முன்னுரிமை கொடுத்தது.

கிராமத்தவர்கள் விவசாயத்தை உறவுகளைப் பேணும், சூழலியல் ஆன்மீகமாகத்தான் அல்லது மத நம்பிக்கைகளாகத்தான் பார்த்தார்கள். ஆனால் சந்தைப் பொருளாதாரமோ அதற்கு எது பெறுமதியாகத் தெரிந்ததோ அதனையே அது இயந்திரங்களால் கட்டமைத்தது.

ஒன்றுக்கொன்று உதவியான சூழலியல்கலாசாரமும், இருமைவாத சூழலியல்கலாச்சாரமும் (Eco-cultural mutualism and eco-culturl dualism):

இவை இரண்டும் நேர், எதிரான இரண்L உலக நோக்குகளாகும். முதலாவது உறவை மேம்படுத்துவதும், ஆத்மீகப் பெறுமதியை பேணுவதும், இரண்டாவது பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்துவதுமாகுமாக இருக்கின்றது.

ஒன்றுக்கொன்று உதவியான சூழலியல்கலாசாரமானது பாரம்பரியவிவசாயத்தையும், சூழலியல் தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண்டது. அதேவேளை நவதாராளவாதம் முன்வைத்த இருமைவாத சூழலியல்கலாச்சாரமானது, பாரம்பரிய விவசாய நடவடிக்கைகள், அறிவுகள், மனிதர்கள், மனிதர்கள் அல்லாதவை போன்றவற்றின் மதிப்பைக் குறைத்து இலாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட பண்டமாக மாற்ற முயற்சித்தது.

அரசின் இருமைவாத சூழலியல்கலாச்சாரத்தின் மெய்மையிலானது Ontology of a eco-cultural dualism), சூழலியலை அழித்தல், பாரம்பரிய கலாச்சாரத்தை துடைத்தெறிதல் போன்ற செயற்பாடுகளில் மிக உறுதியாகவிருந்தது. அத்துடன் மனிதர்களையும், மனதர்கள் அல்லாதவைகளையும் பண்டமாகவே கருதியது.

அதேவேளை ஒன்றுக்கொன்று உதவியான சூழலியல்கலாசாரத்தின்மெய்மையிலானது (ஒன்ற்றொலொஜி ஒப் எகொகல்ச்சரல் மியுச்சலிஸ்ம்) பூமியின் புனிதம், மனிதர்கள், மனிதர்கள் அல்லாதவைளினது இடைத்தொடர்பு, பாரம்பரிய கலாச்சாரங்களின் ஆன்மீகவாதம் அல்லது மதநம்பிக்கைகள் போன்றவைகளை வலியுறுத்தியது. மனிதர்களுக்கும், மனிதர் அல்லாதவைகளுக்கும் (ஒரு வகையில் இரண்டையும் சேர்த்து சூழற்றொகுதி எனவும் கருதலாம்) சொந்தமும், ஆன்மீகமானதுமான உறவு இருக்கின்றது என்றும் கருதியது. இந்தக் கலாச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் குடும்பங்கள், சமூகங்கள் கூடுவதற்கு இடங்கள் இருந்தன. அதனால் உறவுகள் மேம்பட்டன.

கிராமத்து விவசாயிகள், விவசாயம் என்பது உறவுகளைப் பேணும் சூழல்ஆத்மீகம் எனக் கருதினார்கள். ஆனால் அரசோ, இந்த விவசாய நடவடிக்கைகள் அனைத்தும், இயந்திரமயமாக்கப்பட்டு, நவதாரளவாத அளவீடுகளான உற்பத்தித் திறன், போட்டித்தன்மை. இயந்திரமயமாக்கல் போன்றவற்றை முன்வைத்து, சந்தையை நோக்கிய மையப்படுத்திய அதிக இலாபம்தரும் ஒரு பொருளாதார முறையாக மட்டுமே விவசாயத்தைப் பார்த்தது.

உலகத்தின் மற்றப் பகுதிகளில் உள்ளது போன்று ஓமானில், பூகோளமையவாதஇருமை பயனெறிமுறை மனஅமைப்பானது (Dualist utilitarian mindset), இலாபத்தை மையப்படுத்திய, அதாவது பிரதனமாக உலக சந்தைப் பொருளாதாரத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தியதாகவே இருந்தது. அத்துடன் அது உள்ளுரின் பாரம்பரிய நிலத்தின் இடங்களை மையப்படத்திய சூழலியல்கள். பொருளாதாரங்கள், சமூகங்கள், சூழலியல் கலாச்சார நலன்கள் போன்ற அனைத்தினதம் பெறுமதியை அல்லது விழுமியத்தை வலுக்குறைத்துப் பார்த்தது.

பூகோளவாத முதலாளித்துவ மன அமைப்பு ஓமானியர்களில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் இதுவரை காலமும் பின்பற்றி வந்த பாரம்பரிய விவசாயமுறைகளை கைவிட்டு, அரசாங்கம் அறிமுகப்படுத்திய வெளிநாட்டு விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளை, ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அப்போதுதான் அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவிகளையும், விவசாய விரிவாக்கற் சேவைகளையும், மற்ற உதவிகளையும் வழங்க முன்வந்தது.

அரசு பாரம்பரியங்களைப் பாதுகாப்பது தங்களின் நோக்கம் என்று அடிக்கடி கூறிவந்த போதிலும், இந்த உள்ளுர் பாரம்பரிய விவசாய அறிவு என்ற இந்த பாரம்பரியத்தை நூதனக்காட்சிசாலையில் வைத்து மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டியதுடன் அதனை நவீன விவசாய நடவடிக்கைகளில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமற்ற ஒன்றாகும் என்று கூறியது. இதன் காரணமாகவே இந்த சூழலியல் கலாச்சாரம் மையப்படுத்திய விவசாயம் ஒன்றுக்கொன்று உதவியான சூழலியல் கலாச்சாரத்திலிருந்து, இருமைவாத சூழலியல் கலாச்சாரமாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக ஓமானின் சூழலியல் காலாச்சாரத்தின் நிலைபேறான தன்மை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது.

ஓமானிய சுதேச இயற்கை விவசாய முறையை நிராகரித்த, மேற்கத்தைய பாணி அபிவிருத்தி நடவடிக்கைகள், ஓமானின் சுமார் ஐந்தாயிரம் கிராமங்களிடையே முன்பு இருந்த இடைத் தொடர்புகளையும், கூட்டுறவுகளையும் இல்லாமற் செய்திருந்தது. இதனுடன் சேர்த்து, அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அதிகரித்த வேலைவாய்ப்பு, அதிக ஊதியம், கவர்ச்சியான நகரப்புற வேலைவாய்ப்புக்கள், தங்களது உள்ளுர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட சுக் என்ற சந்தைகள் மூடப்படுதல், விவசாயிகளின் விவசாய மானியங்களை அரசுநிறுத்துதல் போன்றவை காரணமாக தங்களது பாரம்பரிய விவசாயத்தை கைவிட்டு ஓமானி விவசாய கிராமத்தவர்கள் நகரத்தை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். இவைதான் கிராமங்கள் பல கைவிடப்படுவதற்கும். கிராமத்திலுள்ள சனத்தொகை குறைவதற்கும் காரணமாக இருந்தன.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...