Thursday, May 28, 2020

பைற்றர் ஜெற் அல்லது கிளாஸ் கிளினர்

· 



ஏ.எம். றியாஸ் அகமட்.

இன்று (ஜுன்இ 18, 2019) வேலைக்குச் செல்லும்போது, வயல்வெளியில் இருந்த ஒரு சிறு குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒரு மீனவரின் வலையில் இரு மீன்கள் பிடிபட்டதையும், அதை அவர் கழற்றி வெளியே எறிவதற்கு முயற்சித்ததையும் எனது வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும்போதே அவதானித்தேன். வுhகனத்தை நிறுத்தி அவரிடம் சென்று, பல்கலைக்கழக மியுசியத்திற்காக கேட்டேன். மகிழ்ச்சியுடன் தந்தார்.
Pterygoplichthys sp. என்ற விஞ்ஞானப் பெயரைக்கொண்ட இம்மீன் ராங் கிளினர் எனப்படுகின்றது. அத்துடன் உள்ளுர் மக்களால் பைற்றர் ஜெற் என மிகப பொதுவாக அழைக்கப்படுகின்றது. (யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட விமானத்தின் வடிவில் இருப்பதால்). 1990 களில் அலங்கார மீன் வளரப்புக்காக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இம் மீன் தவறுதலாகவோ அல்லுத வேண்டுமென்றோ நீர் நிலைகளில் விடப்பட்டு, இன்று முழு இலங்கையின் நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து, உள்நாட்டு மீன்பிடியை மிக அதிகளவில் குறைத்துள்ளது. கடந்த 10 வருட காலமாக இவைகளின் பின்னால் திரிந்து சில ஆய்வுகளை நடாத்தி, இந்த மீன்களை எவ்வாறு மாற்றீடாகப் பாவிக்கலாம் என்பதனையும் முன்வைத்திருந்தோம். கண்டு கொள்ளப்படவில்லை. ஏதிர்காலம் இன்னும் மிக ஆபத்தில் உள்ளது.



No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...