பொலித்தீனும் யானைகளும் மரங்களும் ஒட்சிசனும்
உலகளாவியரீதியிலும், இலங்கையிலும் யானைகளின் இருப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள பல காரணிகளில் பொலித்தீன் பிளாஸ்ரிக் உண்ணுதல் ஒரு காரணியாகும். வாரஇறுதியில் வாகனேரியில் யானைகளின் பல யானைச் சாணத்தை அல்லது விட்டையை பார்த்தபோது அதில் நுாற்றுக் காணக்கான - பல வகையான பிளாஸ்ரிக் பொருட்கள் காணப்பட்டடன. இதற்கெல்லாம் பிரதான காரணம் தவறான திண்ம கழிவு முகாமைத்துவமும், ஹோமோ ஸப்பியனஸ் ஸப்பியன்ஸ் என்ற சுயநலமிக்க பொல்லாத உயிரினமொன்றின் செயற்பாடுகளுமாகும். ஒரு யானை தன் வாழ்நாளில் 18 இலட்சத்து 25 ஆயிரம் (1825000) மரங்கள் வளரக் காரணமாகின்றது என ஆய்வொன்று சொல்கிறது. யானைகள் பாதுகாக்கப்பட வேண்டியதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. மரங்களும், அது தரும் ஒட்சிசனும் என்ற ஒற்றைக் காரணமே போதும் யானைகள் பாதுகாக்கப்படுவதற்கு.
No comments:
Post a Comment