Friday, May 29, 2020

நந்திக் கடல்


பச்சை பச்சையாய்
இலைகள் பளபளத்துக் கைகள் காட்டும்.
மிண்டி வேரும் உதைப்பு வேரும்
காவல்காரர்களாய் நிற்கும்.
மீன்கள் மரமேறி
பின் வழுக்கி கீழே விழும்.
நண்டுகளும், நத்தைகளும்
ஊரிகளும், மட்டிகளும்
பெருநடையில் படையெடுக்கும்.
பாம்புகளும் முதலைகளும்
ஓடிப்பிடித்து விளையாடும்.
இறால்களும், மீன்களும்
துள்ளிக்குதிக்கும்.
ஒரு பறவை மீன்களைக்
கௌவக் கொத்தும்.
பின்னொரு பறவை முட்டையிடும்
குஞ்சும் பொரிக்கும்.
நாளுக்கு பலமுறை
நீரோ ஏறியிறங்கும்.
குடியானவனின் வாழ்க்கையோ
இறங்கியதேறும்.
இந்த அற்புத வனம்
அழகுமிகு கண்டல்வனம்.
    - அம்ரிதா ஏயெம்


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...