
தெருவோர மரங்களை நட்டு பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பல்வேறு தீங்குகளிலிருந்தும் அந்த மரங்களைப் பாதுகாக்க அதற்கு சுற்றிவளைத்து கூடுகள் உருவாக்கப்படுகின்றன. அவை பல வகைகளில் காணப்படுகின்றன. முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் சீமெந்துக் கற்களைக் கொண்டும், முல்லைத்தீவுக் கடற்கரையில் பனை மட்டைகளைக் கொண்டும் கூடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். சீமெந்துக் கல் கூடு என்னைக் வெகுவாக கவர்வதாக இருந்தது. காரணம், செலவு குறைவு, நீடித்த தன்மை, மீள் பாவனை, பாதுகாப்பு, இலகுவில் அகற்ற முடியாத தன்மை போன்ற அம்சங்கள் அவற்றில் காணப்படுகின்றன. பாதுகாப்பில்லாத இடங்களில் மரங்களை நட்டு வளரக்க முயற்சிப்பவர்கள் இந்த சீமெந்துக் கற்களைாலான கூடுகளை முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment