சவுக்கு மரம் (Casuarina equisetifolia), casuarina (English), Kassa (Sinhala), அவுஸ்தரேலியாவைபிறப்பிடமாகக் கொண்ட என்றும் பசுமையான கூம்புருத் தாவரமாகும். கரையோரப் பாதுகாப்பிற்காக அயன மண்டலப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தாவரமானது, தற்போது அந்தப் பிரதேசங்களில் தங்களது குடித்தொகைகளை நிலையானதாக நிறுத்தியுள்ளது. இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரமாக கருதப்படாத சவுக்கு மரமானது, உலகெங்கிலும் ஆக்கிரமிப்பு தாவரமாக கருதப்படுகின்றது. மண்ணரிப்பைத் தடுத்தல், காற்று வேலியாதல், அலங்காரத் தாவரமாதல், விறகு, நார், மருந்து போன்ற பிரயோசனங்கள் இம் மரங்களில் இருந்தாலும், வேகமாக இனம்பெருக்கி வளர்ந்து, சிறிய கிளைகளையும், இலைகளையும் அதிகளவில் உதிர்த்து, பல அங்குல கனத்தில் மேல் மண்ணை மூடி விடுவதால் பல தீங்குகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்படுகின்றன. மண் கனிப்பொருளைக் குறைத்தல். சவுக்கு மரம் வெளிவடும் இரசாயனப் பொருட்களால் மற்ற சுதேச தாவர்களின் வளர்ச்சி தடைப்படல், நுண்காலநிலையை மாற்றல், சுதேச தாவரங்களின் வளர்ச்சியைக் குளப்புதல், உலகின் பல நாடுகளிலும் உள்ள கடல் ஆமைகள், இகுவானா வகை கடல் உடும்புகள் கூடு கட்டி முட்டையிடும் நடிவடிக்கைக்கு தடையாக இருத்தல், மண் அமிலத் தன்மையாதல், பூக்களின் மகரந்தமணி சுவாச அழச்சியை ஏற்படுத்தல் போன்ற பாரிய தீங்குகளை ஏற்படுத்துகின்றன.
வடமராட்சி, வலிக்கண்டி, சவுக்கங்காடு பகுதியில் அண்மையில் செய்யப்பட்ட கள விஜயத்தில் உள்ள படங்களை நீங்கள் காணும்போதே, அதன் இலைகள் மற்ற மரங்களை மூடி ஒளித்தொகுப்பை தடுத்தும், மண்ணை மூடி மற்ற மரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதையும் நீங்கள் அவதானிக்கலாம். சவுக்கு மரங்களுக்கு மாற்றீடாக எதை நடலாம்?
ஒரு நள்ளிரவு 4.00 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கு தனது முச்சக்கர வாகனத்தில் வசீகரன் என்னை அழைத்துக்கொண்டு (இருளைக் கிழித்து யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதி வழியாக) இந்த விடயங்கள் சம்பந்தமாக பலதையும் பத்தையும் கதைத்துக்கொண்டு வரும்போது, அந்த இருளில் ஒளி கிடைத்தவனாக ”பூவசரசுவை சவுக்குக்குப் பதிலாக நடலாம்” என்றேன். அதனை மிகவும் விரும்பி வரவேற்றார். வருகின்ற மழை காலத்தில் ஆயிரம் பூவரச மரங்கள் நடப்போகிறார்கள். வாழ்த்தி அரவணைப்போமாக.
·
Kumaravelu
Ganesan பூவரசு உண்மையில் சிறந்த தெரிவு. Pinus radiata என்றோரு சவுக்கு வகை இங்கு தோட்டங்களாக வளர்க்கப்படுகின்றது. இதை பலகை தேவைக்கு பயன்படுத்துகின்றனர்.
·
Shiva Jyothi இயற்கையைப் பாதுகாப்பதில் கூட்டு முயற்சி பாராட்டுகளும் வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்...( நாம் இதே போல அனைத்து பொதுவான நன்மை தரும் விடயங்களில் சேர்ந்து இயங்கினால் கோடி நன்மை....)
·
Rahmathullah Str ஊக்குவிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் ஒருவர் கிடைக்கும் போது பின்பற்றுவது இலகுமாக இருக்கும், அந்த வகையில் நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சேர்... பசுமையான பணி.
Vadakovay
Varatha Rajan சவுக்கு , சஞ்சீவி ஆகிய மரங்களின் இலைகள் உக்குவதற்கு அதிக காலம் எடுக்கிறது .
இதற்கு பிரதியீடாக பூவரசு சிறந்ததே . இலைகள் பசுந்தாள் பசளையாகும், கால்நடை உணவாகும் , தடிகள் பலதேவைக்கு பயன்படும் . ஒரேஒரு பிரச்சனை மயிர்க்கொட்டி
இதற்கு பிரதியீடாக பூவரசு சிறந்ததே . இலைகள் பசுந்தாள் பசளையாகும், கால்நடை உணவாகும் , தடிகள் பலதேவைக்கு பயன்படும் . ஒரேஒரு பிரச்சனை மயிர்க்கொட்டி
Alex Paranthaman Vadakovay
Varatha Rajan உண்மைதான்.
இதில் இன்னொரு விடயமும் உண்டு.
சிறுவயதில் பாடசாலைகளில் எம்மை செழுமைப்படுத்தியதில்…See More
இதில் இன்னொரு விடயமும் உண்டு.
சிறுவயதில் பாடசாலைகளில் எம்மை செழுமைப்படுத்தியதில்…See More
Amritha Ayem Vadakovay
Varatha Rajan வண்ணத்துப் பூச்சியின் ஒரு முதிர்நிலைகளில் ஒரு பருவம் மயிர்கொட்டி. அதன் உருவம் எம்மைக் கவராமல்விட்டதனால் (அது பரிணாமரீதியில் ஏற்படுத்திக் கொண்டது) அது தப்பிப் பிழைக்கும் ஆற்றலை அதிகரித்துக் கொண்டது. பின்னர் அது முதிர்ந்து வண்ணத்த…See More
Thamayanthy Ks எனது வேலியின் நாற்புறமும் பூவ ரசுதான் எனக்கு மதில் கட்டும் அபிப்பராயம் இல்லை பூவரசையே மதிலாக்கி காட்டுறன் பாருங்க
Vadakovay
Varatha Rajan Thamayanthy Ks
நெருக்கமாக நட்டால் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உயிர் சுவராய் விடும்
நெருக்கமாக நட்டால் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உயிர் சுவராய் விடும்
No comments:
Post a Comment