Friday, May 29, 2020

இலுப்பை மரம்.

பொறுக்கியாய் வாழ்தல் முடிவதில்லை....
Mahua longifolia, இலுப்பை மரம். இலங்கையிலுள்ள மக்களின் கலாசார, மத, வாழ்வியலுடன் நம்பந்தப்பட்டட ஒரு பாரம்பரிய மரமாகும். நூறு அடிக்குமேல் மிக உயரமாக வளரக்கூடிய வெப்ப வலய தாவரமாகும். வெள்ளை நிற பூக்கள் இனிப்பு சுவையுடையது. இலுப்பம் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். அத்துடன் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. கோயில்களுக்கு விளக்கு வைக்க சிவன் கோயில்களுக்கு அருகி்ல் நட்டு வளர்த்தனர் என்று ஒரு தகவல் சொல்கிறது. இலகுவாக முழைக்கக் கூடியது. இந்த மரம் இன்று அருகிவிட்டது. இவ்வகையான மரங்களை மீளுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் அந்த மரங்களின் விதைகளை வெலிகந்த, குடாப்பொக்குணையில் பொறுக்கினோம். இன்னும் பலவகையான விதைகளையும் பொறுக்கினோம். இந்தக் காலம், இலுப்பைக்குரிய காலம், உங்கள் பகுதிகளில் (குறிப்பாக கோயில்களுக்கு அருகில்) இந்த மரங்கள் காணப்படலாம். இயன்றளவு விதைகளை பொறுக்குங்கள். பொறுக்கிகளாய் இந்த உலகத்தை பசமையாக்குவோம்.





No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...