Friday, May 29, 2020

யானைகள் தினம் - ஓகஸ்ட் 12


ஓகஸ்ட் 12 யானைகள் தினம். யானைகள் வாழ்வுகளோடு பின்னிப் பிணைந்தவை.

யானைகள்-01

சுமார் 16 வருடங்களுக்கு முன் லஹூகல-கித்துலான சரணாலயத்தில் யானைகளுக்கு பின்னே அப்போதைய மதிப்பிற்குரிய மாணவர்கள் Ramesh Sivagnanam Jeyakanthan Kantharasa Shripathy Thirunavukarasu Sutha Kunam ஆகியோருடன் திரிந்தபோது எடுத்த படங்கள். வனசீவராசிகள் திணைக்களத்தின் அலுவலகத்தில் தங்கினோம். காடுகள் சுற்றினோம். விலங்குகள், தாவரங்கள் பல கண்டோம். கற்றோம். சமைத்தோம். ஆடினோம். பாடினோம். அயற் கிராமத்தவர்களுடன் நன்றாக பழகினோம். ஒரு திருமண விழாவில்கூட பங்குபற்றினோம். கிடைத்த வாகனங்களிலெல்லாம் பயணம் செய்தோம். மனிதர்களைப் படித்தோம். முடிந்து வரும்போது வாழ்க்கையைக் கற்றிருந்தோம். இன்றும் அந்த மதிப்பிற்குரிய மாணவர்களின் கற்றலின் மீதான ஈடுபாட்டையும், தியாகத்தையும் மதிக்கிறேன். பிரமிக்கிறேன்.




யானைகள் - 04
பின்னவெல யானைகள் காப்பகத்தில் சில வருடங்களுக்கு முன் சில காலங்கள் மௌரி, தம்மன்னி, அனுத்தாரா, பாரதி (பெண் யானைகள்), ஜயது, மீகா (ஆண் யானைகள்) நடத்தைகளைத் தொடர்ந்தபோது, எனது மாணவர் டபிள்யு.எம்.பி. சமரசிங்கவினால் கிளிக்கிய படங்கள் (குளித்தல், உண்ணல், பருகல், துாசுதல், சேறுதல், சயனித்தல், களவெடுத்தல், வந்தனம், உராய்தல், கால்கள் உராய்தல்)



No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...