Saturday, May 30, 2020

சீமைக் கருவேலை (Prosopis juliflora) மரங்களை அழித்து சுதேசிய சூழற்றொகுதியை மீளுருவாக்கல்.


யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதிகளில் முன்னர் இருந்த சுதேசிய, ஆரோக்கியமான சூழலை உருவாக்கு முகமாக அந்நிய ஆக்கிரமிப்பு தாவரமான சீமைக் கருவேலை (Prosopis juliflora) மரங்களை அழித்து அதனை கட்டுப்படுப்படுத்தும் நடவடிக்கையை சமூகமாக்கியதில் மிகப் பெரும்பான்மையான அல்லது முழுப் பங்கும் பசுமைச் சுவடு அமைப்பையே சாரும். இதன் காரணமாக அல்லது அதனைத் தொடர்ந்து அரச நிறுவனங்களும் முக்கிய வகிபாகத்தை எடுக்கத் தொடங்கின. நேற்றைய எனது கள விஜயத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மரங்கள் முழுமையாக பிடுங்கப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது. அவைகளில் பல முற்றாக அழிக்கப்பட்டிருந்தன. மிக சந்தோசமாக இருந்தது. ஆனால் இன்னும் பல பிடுங்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன (இவை அரச நிறுவனங்களால் பிடுங்கப்பட்டவை). அழிக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு தாவரங்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். அவைகள் இனப்பெருக்கும் வேகத்தைவிட அகற்றி, அழிக்கும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். அத்துடன் மீள் ஆக்கிரமிப்பு அபாயம் (Re- invasion risk) பூச்சிய மட்டத்திற்கு பேணப்பட வேண்டும். அத்துடன் உடனடியாக சுதேச மரங்களும் மீள் நடுகை செய்யப்பட்டிருக்க வேண்டும். துன்னாலை மேற்கு, கரவெட்டி பகுதியிலுள்ள அரச காணியில் ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றிய பின்பு இவை எதுவும் செய்யப்படவில்லை என்ற காரணங்களால், பிடுங்கப்பட்ட மரங்களில் இருந்த வித்துக்கள் பரவியதன் காரணமாக மீண்டும் பாரியளவில் சீமைக்கருவேல மரங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. அத்துடன் பார்த்தீனியமும் மிக மிக பாரியளவில் வேகமாக படையெடுத்துள்ளன. இவைகளை வெறுங் கைகளால் இந்த மழை காலத்தில் இலகுவாக அகற்றி, சுதேச மரங்களும் நடுகை செய்யப்பட வேண்டும். இவைகளை பசுமைச் சுவடு அமைப்பினர் செய்வார்கள்.







No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...