Monday, July 18, 2016

யானைகள்

யானைகள்
     - அம்ரிதா ஏயெம்

உயரக் கிளைகள்
முறிந்து கீழக்கிடக்கும்.
சிறு விலங்குகள்
அரைத்து உண்ணும்.
பதைத்த உயிர்கள்
பாங்காய் பசியாறும்.
காலால் உதைத்து
நீர் சுரக்கும்.
தகித்த உயிர்கள்
தாகம் போக்கும்.
கோடையின் கொடுமையோ
மெல்லக் குறையும்.
மலையாய் விட்டை
எங்கும் விரவிப்போடும்.
காடு சீராட்டி
உயிர் வளர்க்கும்.
ஊட்டுவதால் தாயாகும்.
உதவுவதால் நண்பனாகும்.
காப்பதனால் காவனாலாகும்.
யானைகள் நம்
சூழலின் தோழனாகும்.
வணங்கப்படு பொருளாகும்
வேட்டையின் இலக்காகும்
பேரசர்களின் பெருமையாகும்
போரின் இயந்திரமாகும்
கலாசார சின்னமாகும்
கலைகளின் கோலமாகும்
வளர்த்தலில் மித்துருவாகும்
மிரளலில் சத்துருவாகும்
சுமைகளின் தாங்கியாகும்
தாங்கவொண்ணா சுமையுமாகும்
யானைகள் நம்தோழனாகும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...