Thursday, June 2, 2016

கடலுக்குள் தரைப் பாம்புகள் மட்டுமல்ல, முதலைகளும் இறக்கும்.


கடலுக்குள் தரைப் பாம்புகள் மட்டுமல்ல, முதலைகளும் இறக்கும்.
-ஏ.எம். றியாஸ் அகமட்


நன்னீர் நிலைகளான குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் போன்றவற்றிலுள்ள பாம்புகளும், தரையிலுள்ள,  காடுகளிலுள்ள பாம்புகளும் வெள்ளத்தில் அள்ளுண்டு கடலுக்குள் செல்லுகின்றன. கடல் வாழ்க்கைக்கு இசைவில்லாத உடலமைப்பும், உவர்த்தன்மையும் அவைகளை கடலுக்குள் நீண்ட நேரம் வைத்திருக்காது. எனவே பாம்புகள் செயற்பாடு குறைந்த நிலையில், மயங்கிய நிலையில் கரையொதுங்கும் பின்னர் நிறையப் பாம்புகள் இறந்துவிடும். இது ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தோடு தொடர்புபட்ட ஒரு தோற்றப்பாடு அல்லது நிகழ்வாகும்.


இந்தப் பாம்புகளுக்கும், கல்லடி விலாங்குகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டு தோற்றப்பாடுளும் இரு வேறுபட்ட நிகழ்வுகளாகும்.
இந்த நிலைமை பாம்புகளுக்கு மட்டுமல்ல நன்னீர் வாழ் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். மீன்கள், தவளைகள், மீன்கள், முதலைகள் போன்றன.
மருதமுனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு கடற்பிரதேசத்திற்குள் வெள்ளத்தினால் அள்ளுப்பட்டு வந்த முதலை கடந்த இரு நாட்களாக வாழ்க்கைக்கான பெரும் போராட்டத்தை நடாத்தி இன்று மூச்சுத் திணறி இறந்து காணப்பட்டது. இதன் இறப்புக்கு 25 சதவீதம் அதனை புதினம் பார்க்க சென்ற சனங்களும், அதிகார மட்டங்களும் ஒரு வகையில் காரணம். பார்வையாளர்கள் முதலையை வெளியேற விடவில்லை அல்லது முதலை வெளியேற தயக்கம் காட்டியமைக்கு அவர்கள் காரணமாய் இருந்தது.
எனவே ஊடகங்களுக்கும் ஒரு பொறுப்பிருக்கிறது. கடலிலிருந்து பாம்புகள் கரையை நோக்கி படையெடுப்பு என்னும் போது அது வேறொரு தொனியையும், பீதியையும் கிளப்பிவிடுபனவாக உள்ளன. எனவே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது ஒரு வகையில் கடமை என நினைக்கின்றேன். 












 படம் 1: 21.12.2012 கடலுக்குள் முதலை உயிருடன்
படம் 2: 21.12.2012 முதலையை சிறுவர்கள் துரத்தல்
படம் 3: 22.12.2012 வெற்றிப் பெருமிதத்துடன் இறந்த முதலையின் மேல்
படம் 4: 22.12.2012 இறந்து கிடக்கும் முதலை

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...