Thursday, June 2, 2016

காத்தான்குடி: வீதிப் பசுமையாக்கமும், கலாச்சாரமும், உயிரினப் பல்வகைமைக் காப்பும், அரசியலும் - 1

காத்தான்குடி: வீதிப் பசுமையாக்கமும், கலாச்சாரமும், உயிரினப் பல்வகைமைக் காப்பும், அரசியலும்


ஏ.எம். றியாஸ் அகமட், விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்.
காத்தான்குடியை ஒவ்வொரு முறை கடக்கும்போதெல்லாம் பேரீச்சை மரங்கள் புதிது புதிதாக ஏதாவது ஒருவகையில் மனதின் எண்ணங்களை கிளறச் செய்துகொண்டே இருக்கும். ஒரு முறை பசுமையாக்கல் தெரியும். இன்னொரு முறை கலாச்சார அடையாளம் தெரியும். இன்னொரு முறை உயிரினப்பல்வகைமைக் காப்புக்கான கூறுகள் தெரியும். இன்னொரு முறை keystone, umbrella, flagship இனக் காப்புக்கான கூறுகள் ஏதோவொரு வகையில் நிராகரிக்கமுடியாதபடி தெரியும்.
இன்னொரு முறைlandscape பல்வகைமைக் காப்புக்கான மூலங்கள் தெரியும். இன்னொருமுறை insitu காப்பின் உலக மரபுரிமை இடமாகவும் தெரியும். இன்னொரு முறை சமூகம் தெரியும். பின்னர் அதன் இருப்பும் தெரியும். இலக்கியத்தின் புதிய குறிப்பானும், குறியீடுகளும் பனை-தென்னை-பேரீச்சையாய் தெரியம். இன்னொரு முறை கிழக்காரும், மேற்காரும், வடக்காரும், தெற்காரும் பேரூந்தின் ஜன்னலூடாக அதோ! காத்தான்குடி பேரீச்சை என அதிசயிக்கும் போது அல்லது வாகனத்தைவிட்டு இறங்கி தங்களுடன் பேரீச்சையை வைத்து படம் எடுக்கும் போது ecotourism யின் கூறுகள் தெரியும். இன்னொரு முறை உலகெங்கிலும் சூழலுக்கு சவாலாக இருக்கின்ற அரசியல் இங்கு அதிசயிக்கத்தக்க வகையில் சாதகமாக இருப்பது தெரியும்.

ஓவ்வொரு முறையும் கடக்கும் போதும் செப்பமாக, நேர்த்தியாக நாட்டப்பட்ட தருக்கள் நினைவுகளின் தடங்களில் ஏதாவது ஒன்றை ஒடவிட்டுக்கொண்டே இருக்கின்றன. சூழலியலாளனுக்கும், உயிர்க்காப்பாளனுக்கும், பசுமையாளனுக்கும், நகரஅபிவிருத்தி திட்டமிடலாளனுக்கும், நிலத்தோற்றவுருவவியலாளனுக்கும், கவிஞனுக்கும், அரசியல்வாதிக்கும், சமூகவியலாளனுக்கும் மேலும் இவைகளை ஆய்வு செய்யும் ஆய்வாளனுக்கும் இங்கு வேலையிருக்கிறது. இந்தத் தருக்கள் இவர்களுக்காக ஏதாவது ஒன்றை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கும்.
இதனைப் பற்றி எழுத வேண்டும் என்ற உந்துதல் நீண்ட நாளாகவே என்னுள் இருந்து வந்திருக்கின்றது. எனவே இப்போது எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
இந்த எழுத்து பின்வருவனவற்றைக் கொண்டதாக இருக்கும். பேரீச்சை மரங்கள், பசுமையாக்கம் அதன் இயல்புகளும் அனுகூலங்களும், பசுமையாக்கல் எதிர்கொள்ளும் சவால்கள், உயிரியல் பல்வகைக் காப்பின் கூறுகள், keystone, umbrella, flagship இனக் காப்புக்கான கூறுகள், landcape பல்வகைமைக் காப்பின் கூறுகள் போன்றவைகளை காத்தான்குடி பேரீச்சைகளில் பிரயோகிக்க முயலுதல், சூழலும் அரசியலும், முடிவுரை.
சில போதுகளில் இந்த எழுத்துகள் சுருங்குவதற்கும் அல்லது விரிவதற்கும் வாய்ப்புகள் இருக்கலாம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...