Friday, December 9, 2016

இஸ்ரவேல் எரிகின்றது ஏன்? அந்நிய ஆக்கிரமிக்கும் தாவரங்களை (Invasiv Allien Species Plants) களை முன்வைத்து ஒரு பார்வை.

இஸ்ரவேல் எரிகின்றது ஏன்? அந்நிய ஆக்கிரமிக்கும் தாவரங்களை (Invasiv Allien Species Plants) களை முன்வைத்து ஒரு பார்வை.
-ஏ.எம். றியாஸ் அகமட்
1) மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களிடமிருந்து அவர்களின் நிலத்தை வாங்க அமெரிக்க அரசு கடிதம் எழுதியபோது அக்கடிதத்திற்குப் பதிலளித்து "சீத்தல்" என்ற சிவப்பிந்தியத் தலைவன் எழுதிய கடிதம் வரலாற்றில் தனி இடத்தை பெற்றுள்ளது. ஆற்றாமையுடனும் இலக்கியச் சுவையுடனும் எழுதப்பட்ட அக்கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு:
பூமிக்கு என்ன நேரிடுகிறதோ அதேதான் பூமியின் மைந்தர்களுக்கும் நேரும். மனிதன் பூமியை எச்சில்படுத்தினால் அவன் தன் மேலேயே எச்சில் படுத்திக் கொள்கிறான். பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல. மனிதன்தான் பூமிக்குச் சொந்தமானவன். இது எங்களுக்குத் தெரியும். இங்கு எல்லாமமே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிந்ணைதிருக்கின்றது. பூமிக்கு என்ன நேர்கிறதோ அதேதான் மண்ணின் மைந்தர்களுக்கும் நேரிடுகிறது. உயிர்களின் வாழ்க்கை வலையை மனிதன் பின்னவில்லை. அதில் அவன் ஒரு இழைதான். எனவே அந்த வலைக்கு என்ன செய்கிறானோ அதை மனிதன் தனக்குத்தான் செய்து கொள்கிறான். வெள்ளை மனிதனும் பொது விதிகளிலிருந்து தப்ப முடியாது. முடிவாக நாம் அனைவரும் சகோதரர்களே என்பதைக் காணத்தான் போகிறோம். நம் அனைவரின் கடவுளும் ஒன்றே என்று நாமறிந்த உண்மை. வெள்ளையருக்கும் ஒரு நாள் தொடரத்தான் போகின்றது. ஏங்கள் நிலத்தை சொந்தம் கொண்டாட எண்ணுகின்றீர்கள். ஆனால் அது முடியாது. கடவுள் எல்லா மனிதருக்கும் பொதுவானவர். அவரது அன்பு, செவ்விந்தியர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் பொதுவானது. இந்த பூமி கடவுளுக்கு விலை மதிப்பற்றது. இதற்கு தீங்கு இழைத்தால் கடவுளை அவமதித்தது போலாகும். வெள்ளையர் காலமும் ஒரு நாள் முடியும். ஒரு வேளை மற்றைய மனித

இனங்களை விட அது வேகமாகவும் இருக்கலாம். நீங்கள் உங்கள் படுக்கையை அசுத்தப்படுத்தினால் அந்தக் கழிவுப் பொருட்களாலேயே மூச்சுத் திணறி முடிவடைவீர்கள். எந்த கடவுள் உங்களை இந் நிலத்திற்கு கொண்டு வந்து ஏதோ ஒரு காரணத்திதற்காக சிவப்பிந்தியரை வெற்றி கொள்ள வைத்திருக்கிறாரோ அவரது சக்தியாலேயே நீங்கள் அழிவீர்கள். எங்களை வெற்றி கொண்டு வாழ்வதை விதியெனக் கொண்டால் அந்த விதி எங்களுக்கு புரியாத புதிராகவே இருக்கின்றது. ஏனெனில் எங்கள் எருமை மாடுகள் ஏன் கொலையுற வேண்டும்? ஏன் கானகக் குதிரைகளை ஏன் நீஙகள் அடிமை கொள்ள வேண்டும்? காடுகள் எங்கும் உங்கள் மக்கள். மூலை முகடுகள் எல்லாம் தொலைபேசிக் கம்பிகள். புதர்கள் மறைந்துவிட்டன. இனிய வாழ்க்கை முடிந்து வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது.
2) றோம் எரிந்து கொண்டிருக்கும் போது
பிடில் வாசித்த நீரோ மன்னன் அல்ல.
எனக்கு கொள்கைகள்தான் பிரச்சினையன்றி
யூதர்கள் அல்ல.
3) ஆந்நிய ஆக்கிரமிக்கும் இனங்கள் என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்தை சற்று உற்று நோக்கினால் இந்தக் கட்டுரைக்குள்ள நுழைவதற்கு இலவுவாக இருக்கும். அந்நிய ஆக்கிரமிக்கும் இனங்கள் என்றால் அவை அறிமுகம்செய்யப்பட்ட இனங்களாக அல்லலு பூர்வீகமவல்லாத இனங்களாக காணப்படவேண்டும். அதாவது பிறிதொரு நாடு (புவியியல் எல்லைகளுக்கு அப்பால்), பிரதேசம் அல்லது சூழல்தொகுதியில் இருந்து ஒரு புதிய நாடு, பிரதேசம் அல்லது சூழல்தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட இனங்கள். இவ்வாறான ஆக்கிரமிக்கும் இனங்கள் இயற்கை உயிர்பல்வகைமைக்கு அச்சுறுத்தலாக அமைய வேண்டும் (இதனால் இவை களைகள், பீடைகளில் இருந்து வேறுபடுகின்றன). இவை பல்வேறு அழிவுகளை உண்டாக்குகின்றன. பூர்வீக இனங்களை நேரடியாக பாவித்தலும் அழித்தலும், வளங்களை பயன்படுத்துவதற்கான கடுமையான போட்டி, பூர்வீக இனங்களுடன் கலப்பில் ஈடுபடல், குறிப்பிட்ட சில நோய்களுக்கான காவிகளாக செயற்படல், இலகுவாக அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளின் காலநிலைக்கு பாதிக்கப்படல் (உதாரணம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மானா அல்லது இலுக்கு புல் இலகுவில் தீப்பற்றக்வுடியது) போன்றன அவைகளில் சிலவாகும்.
4) ஏன் இஸ்ரேல் எரிகிறது என்பதை ஒரு சூழலியலாளன் என்ற வகையில் எனது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று நினைக்கின்றேன். மத்திய கிழக்கு பாலைவன நாடான இஸ்ரவேல், அந்த நாட்டுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பைன் மரங்களால் நிரம்பி வழிகிறது. இது ஐரோப்பிய நாட்டு மரமாகும். இந்த மரம், 1930 களில் யூதர்களின் தேசிய நிதியம் என்னும் அரச சார்பற்ற அமைப்பினால், நிலத்தை மீளமாற்றுகிறோம் என்ற அடிப்படையில் பலஸ்தீனிய நிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1935 ம் அண்டு முடிவில், இந்த அமைப்பு, 17 இலட்சம் மரங்களை 1750 ஏக்கர் நிலப் பரப்பில் நாட்டியிருந்தது மிக முக்கியமான ஒன்றாகும். 50 வருட காலத்திற்கும் மேலாக இந்த அமைப்பு 26 கோடி மரங்களை பிரச்சினைக்குரிய பலஸ்தீன பூமிகளில் நாட்டியுள்ளது. பலஸ்தீனர்களின் கிராமங்களின் அழிவுகளையம், இனச் சுத்திகரிப்பின் அடையாளத்தையம், அவர்களின் வரலாற்றையும் அழிப்பதற்கு செய்யப்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட முயற்சியாகும்.
கடந்த காலங்கில் யூதேநி மானது பலஸ்தீனர்களின், கடந்தகால நாகரிகத்துடன் உள்ள மத்திய கிழக்கு நாட்டுக்குரிய தன்மையை அழித்து, தாங்கள் கைப்பற்றிய பலஸ்தீன நிலத்திலிருந்த இஸ்ரவேலுக்கு ஒரு மத்திய கிழக்கு தன்மையை கொடுக்க முனைந்தது. பலஸ்தீனத்தை ஐரோப்பா போல நிலக்காட்சிகளில் மாற்ற நினைத்தது. இதன் காரணமாக பாலைவனத்திற்கு இயற்கையாய் இயைபாக்கமடைந்த இயற்கைக் காடுகளை அழித்தும், மத்திய கிழக்கின் வெப்பத்திற்கும் நெருப்பிற்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய ஒலிவ் மரங்களை அடுயோடு பிடுங்கியும், அந்த இடங்களில் பைன் மரங்களையும் நாட்டியது. இதன் காரணமாக கார்மல் மலைக்குன்றின் தென் பகுதியிலிருந்த பகுதிக்கு இஸ்ரவேலர்கள். சின்ன சுவிற்சர்லாந்து எனப் பெயரிட்டனர். அங்கே தற்போது 670 இன மரங்கள் காணப்படுகின்றன. இந்த சின்ன சுவிற்சர்லாந்து, உல்லாசபுரியாக மாற்றப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Add caption
இதன் காரணமாக பைன் மரங்களும், காடுகளும் மத்திய கிழக்கின் பாலைவன காலநிலைக்கு இயைபாக்கமடையவில்லை. யூதேநி கணக்கெடுப்பின் படி 10 இற்கு 6 தாவரங்கள் செத்துவிட்டிருந்தன. எஞ்சிய தாவரங்களும், அந்த மரங்களிலிருந்த றெசின், ரேப்பன்ரைன் காரணமாகவும், மத்திய கிழக்கு பாலைவனத்தின் அதிக வெப்பநிலை காரணமாகவும், தீயை உண்டாக்ககூடிய மூலாதாரமாகவே தொழிற்பட்டனவன்றி பாதுகாப்பான உயிர்ப்புள்ள காடாக மாறவில்லை. இதன் காரணமாக அபாயகரமான ஒரு வலயமாக இக்காடுகள் மாறின. இந்த கார்மல் மலையில் 2010 ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 42 பேர் உயிரிழந்திருந்தனர்.
உண்மையிலேயே, இஸ்ரவேலிடம், அணுஆயுதங்கள் இருந்தும், உலகின் பயங்கர இராணுவம் இருந்தும், மொசாட் புலனாய்வு சேவை இருந்தும், அதற்கு ஆதரவு தெரிவிக்கக்வுடிய நாடுகள் உலகம் பூராக இருந்தும், இஸ்ரவேல் ஒரு பாதுகாப்பற்ற நாடாக மாறியுள்ளது. இதன் காரணமாக மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்பட்டுப் போகும் ஒரு அம்சமும் காணப்படுகின்றது. மத்திய கிழக்கின் பலஸ்தீனத்திற்கு சீயோனிசம்
, இஸ்ரேலியர்கள், இஸ்ரவேல் நாடு மட்டுமல்ல பைன் மரங்களும் அந்நிய ஆக்கிரமிக்கும் இனங்கள்தான்.

No comments:

Post a Comment

விதைப்பந்துகளை மீளுருவாக்கம் செய்யும் ஆய்வறிவாளன் றியாஸ் அகமட்

 - து. கௌரீஸ்வரன் திரு றியாஸ் அகமட் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து அப்பல்கலைக்கழகத்திலேயே விலங்கியல் துறையி...