ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை)
இதன்காரணமாக அரசாங்கம் பாரிய பொருளாதார செலவினத்தில் உயர்தொழில்நுட்பம்கொண்ட அனர்த்த முன்னெச்சரிக்கை கட்டடமைப்புக்களை நிறுவியிருக்கின்றது. இவைகளை தவிர்த்து அனர்த்த முன்னெச்சரிக்கையை எதிர்வுகூறும் பல வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் அசாதாரண விலங்கு நடத்தைகளை பாவித்து அனர்த்தங்களை முன்னெச்சரிக்கை செய்வதும் ஒரு வழியாகும். துரதிருஸ்டவசமாக அசாதாரண விலங்கு நடத்தைகள் அனர்த்த முன்னெச்சரிக்கை கருவியாக பாவிக்கலாம் என்ற விடயம் கவனத்தில் எடுக்கப்படாததாகவும், அறியப்பட்டது குறைவாகவும் காணப்படுகின்றது. அத்துடன் பொருளாதார ரீதியில் இது செலவும் மிக மிக குறைந்ததாகும்.
அதிகமான விலங்குகள் ஒலி, வெப்பம், தொடுகை, அதிர்வு, நிலைமின்னியல், இரசாயன செயற்பாடு, காந்தப் புலம் போன்றவைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை உணரக்கூடிய மிக மிகத் திறன் வாய்ந்த புலன் அங்கங்களை கொண்டிருக்கின்றன. உதாரணமாக மீன்கள் மனிதர்கள் உணருவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரேயே நிலஅதிர்வுகளையும், நடுக்கங்களையும் உணரக்கூடியன. யானைகளும், சில விலங்குகளும் நில அதிர்ச்சி மிகத் தூரத்தில் தொடங்கியிருந்தாலும், அதனை உணரும் திறனை கொண்டிருக்கின்றன. பலவகையான பறவை இனங்களும், யானை, புலி போன்ற விலங்களும் 1-3 ஹேற்ஸ் அளவுள்ள கீழ்க்கழியொலிகளை உணரும் திறன் கொண்டவையாக காணப்படுகின்றன. ஆனால் மனிதர்களி;ல் இது 100 – 200 ஹேற்;ஸ் ஆகும்.
சுனாமி வருதவற்கு முன் இந்தோனேசியாவில் பல்லாயிருக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக அந்த இடங்களைவிட்டு நகர்ந்ததாகவும், இலங்கையில பல்லாயிரக் கணக்கான மக்கள் சுனாமியால் கொல்லப்பட்டபோதும், காட்டில் இருந்த ஒரு யானை அல்லது முயல் கூட கொல்லப்படவில்லை என்றும் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வில் நாய்களின் அசாதரன நடத்தைகளான அதிகமாக கடித்தல், அதிகமாக குரைத்தல் போன்றவை இரு மாதங்களுக்கு பின்னர் வரக்கூடிய 7.2 றிச்டர் அளவுடைய பூமியதிர்ச்சியை முன்னெச்சரிக்கை செய்திருக்கின்றன என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வுpலங்குகள் பூமியதிர்ச்சிக்கு முன்னர் இடம்பெறும், நிலம் சாய்தல், ஈரப்பதன்;, மின் ஓட்டம், காந்தப் புலம் போன்றவைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை உணரக்கூடியன. இவைகள் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடந்த ஆய்வுகளின் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கின்றன. சிலந்திகள், மற்றும் சில பூச்சிகள், எலி (காய்;ந்த மண்ணில் விதைகளைப் புதைத்தல்), போன்றவை இந்த ஈரப்பதனை உணரும் விலங்குகளுக்கு உதாரணங்களாகும்.
உலகின் பல நாடுகளின் உள்ளுர்க்குடிகள் இன்றும் பறவைகளின் அலறல்களையும், கடல்வாழ் உயிரினங்கள் நீந்தும் திசைகளின்; மாற்றங்களையும் வைத்து கடற் கொந்தழிப்பு, சுனாமி போன்ற இயற்கை அனரத்தங்களை முன்னெச்சரிக்கை செய்கிறார்கள். ஆரியத்திரன என்கின்ற இலங்கை ஆய்வாளர்p சுனாமிக்கு முன்னர், சுமாத்திராவின் கடற்படுகைகளிலிருந்து இலங்கையை நோக்கி; மீன்கூட்டங்கள் இடம் பெயர்ந்ததை குறிப்பிடுகிறரார். ஏனெனில் மீன்களின் பூமியதிர்ச்சியை உணரும் திறன் மிக மிக அபாரமானது. மீன்கள் மனிதர்கள் உணருவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரேயே நிலஅதிர்வுகளையும், நடுக்கங்களையும் உணரக்கூடியன. சுறா, திருக்கை போன்றவையும், பல மீனினங்களும் மின்புலத்தில் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது ஒரு கோடியில் ஒரு பங்கு வோல்ட்டேஜ்) மாற்றங்களை உணரக்கூடியன. டொல்பின் போன்ற திமிங்கிலங்கள் (பறவைகளும் கூட) காந்தப் புலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு அசாதாரண நடத்தைகளை காட்டக்கூடியன.
சுவாசிலாந்தில் வெள்ளப்பெருக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்படுகின்றன வறட்சியும் மிகப் பெரிய அனர்த்தங்களாக காணப்படுகின்றன. இதனை அம் மக்கள் புளோசியஸ் என்ற பறவை மரத்தில் கூடு கட்டும் உயரத்தை வைத்து, அதாவது மரத்தில் அதிக உயரத்தில் கூடுகள் கட்டினால் வெள்ளப் பெருக்கு ஏற்படப் போகிறது என்ளும், குறைந்த உயரத்தில் கட்டினால் ஏற்படாது என்றும் அனர்த்த முன்னெச்சரிக்கைய பெற்றுக் கொள்கிறார்கள். பறவைகளின் அலறலை வைத்து மழை வரப்போவதையும், மேலும் அசாதாரண விலங்கு நடத்தைகளுடன் காற்றின் திசை, சந்திர பிறைகளின் வடிவங்கள் வைத்து இயற்கை அனர்த்தங்களை அம் மக்கள் முன்னெச்சரிக்ககை செய்கிறார்கள். தன்சானியாவில் ஆடுகளின் நடத்தைகளை வைத்து வரட்சியையும், வரப் போகின்ற உணவுப் பஞ்சத்தையும் எதிர்வுகூறுகின்றார்கள்.
ருஸ்யாவின் கம்சற் ஓர்குக் பிரதேச வேட்டையாடுபவர்களும் மேய்ப்பர்களும் சேகரிப்பவர்களும் வானத்தின் நிறங்கள், நாய் பனியில் முதுகை வைத்து உருளுதல், வானில் காகங்கள் வட்டமடித்தல் போன்றவைகளை வைத்து அனர்த்தங்களை முன்னெச்சரிக்ககை செய்கிறார்கள். இந்தோனேசியாவின் 80500 பேரைக் கொண்ட சிமிலு சமூகத்தினர் எருமை மாடுகளின் அசாதாரண நடத்தைகளிலிருந்து முன்னெச்சரி;க்கையைப் பெற்று உயர்வான இடங்களுக்கு நகர்ந்ததன் காரணமாக காரணமாக 2004ம் ஆண்டின் சுனாமி பேரழிவில் தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். இந்தோனேசியாவின் ஆசே பிராந்தியத்தின் முழு நாடு பூராக 170000 பேர் கொல்லப்பட்டு போக, சிமிலு சமூகத்தினரில், ஏழு பேரே கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவில் நடாத்தப்பட்ட பல ஆய்வுகள் நாய், நரி, பண்டா கரடி, பன்றி, பசு, குதிரை, கோவேறு கழுதை, லோச்சஸ், புலிகள் போன்றவை பூமியதிர்ச்சிக்கு முன் அசாதாரண நடத்தைகளைக் காட்டுவதாகவும், நெடுந் தூக்கத்திலுள்ள பாம்புகளின் தூக்கம் குழப்பப்பட்டு, அவை வெளியில் வந்து பனியில் உறைந்து போவதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஆடுகள் தங்கள் கூடுகளுக்குள் செல்ல மறுத்தல், பூனையும் பன்றியும் தங்களது குட்டிகளை கௌவிக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்தல், நடு இரவில் கோழிகள் கூட்டில்; மோதி ஒலி எழுப்பல், மீன்கள் மீன் தொட்டியுடன் மோதி ஒலி எழுப்பல், பறவைகள் தங்கள் சுடுகளை விட்டு வெளியேறல், மிருகக்காட்சி சாலைகளின் விலங்குகள் இரவில் தங்களது இடங்களுக்கு சென்று தங்குவதற்கு மறுத்தல், பாம்புகள், பல்லிகள், சிறிய முலையூட்டிகள் (எலி, மூஞ்சுறு) தங்களது பொந்துகளை விட்டு வெளியேறிச் செல்லுதல், கடற்கரையோரங்களில் பூச்சிகள் பெரும் திரளாகக் குவிதல், கால்நடைகள் உயர்ந்த இடங்களுக்கு செல்லுதல், வீட்டு வளர்ப்பு பிராணிகள் பணிய மறுத்தல், காட்டு வாழ் பறவைகள் தங்களது வழமையான வாழிடங்களை விட்டு வெளியேறல் போன்றவை பூமியதிர்ச்சிக்கு முன்னரும் மற்றைய அனர்த்தங்களுக்கு முன்னரும் நடக்கும் அசாதாரண விலங்கு நடத்தைகளுள் சிலவாகும்.
அசாதாரண விலங்கு நடத்தைகளை அன்னர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாக உபயோகிப்பதனை பல வளர்ந்த நாடுகளிலும், இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் இன்னும் ஒரு வளராத, கவனிக்கப்படாத துறையாகவும், திறன்வாய்ந்த நுட்பமாகவும் காணப்படுகின்றது. எனவே நாளாந்தம் விலங்குகளின் அசாதரண நடத்தைகளை உற்று நோக்குவதன் மூலமும், விலங்குகளின் அசாதரண நடத்தைகளை அனர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாக பாவிப்பதன் மூலமும், பாரியளவிலான நிதியை சேமிப்பதுடன், பெருமளவிலான உயிரிழப்பு, சொத்திழப்புக்களையும் தவிர்க்கலாம்.
அருமையான கட்டுரை. It would be more elaborate if references are given at appropriate places. This would make this article a citable scientific publication.
ReplyDeleteMy best wishes for more and more such useful articles.